Crime : புதுமண தம்பதி உயிரிழப்பு.. முதலிரவில் நேர்ந்த சோகம்.. அதிர்ச்சியில் உறவினர்கள்.. என்ன காரணம்!
தம்பதிக்கு உரிய அறை காற்றோட்டம் இல்லாத அறையில் முதலிரவு நடந்ததால் இருவரும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Crime : தம்பதிக்கு உரிய அறை காற்றோட்டம் இல்லாத அறையில் முதலிரவு நடந்ததால் இருவரும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கோலாகல திருமணம்
உத்தர பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் யாதவ். இவரது மகன் பிரதாப் யாதவ் (22). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா தேவி (20) என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த 30-ஆம் தேதி இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
பின்னர், இருவருக்கும் சடங்குகள் முடிந்து அன்று இரவே வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. தம்பதி இருவரையும் மகிழ்ச்சியுடன் முதலிரவுக்கு உறவினர்கள் அனுப்பி வைத்தனர். பின்னர், அடுத்த நாள் காலை நீண்ட நேரம் ஆகியும் தம்பதியினர் கதவை திறக்காமல் இருந்துள்ளனர். நீண்ட நேரம் காத்திருந்து பார்த்தும் கதவை திறக்காததால் உறவினர்கள் கதவை உடைத்துள்ளனர்.
தம்பதி உயிரிழப்பு
அப்போது இருவரும் பேச்சு மூச்சின்றி சடலமாக இருந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து, உறவினர்கள் இருவரையும் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மாரடைப்பு
பின்னர், இருவரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், தம்பதி இருவரும் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், தம்பதிக்கு முதலிரவு நடந்த அறை காற்றோட்டம் இல்லாத அறையில் இருந்துள்ளனர். இதனால் தம்பதிக்கு மூச்சு திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, ஜோடி இருவருக்கும் ஒன்றாக இறுதி சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கி இருந்த இடத்தில் தடயவியல் சோதனை நடத்தப்பட்டு அவர்கள் சாப்பிட்ட உணவுகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புதுமணத் தம்பதி முதலிரவில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க