மேலும் அறிய

நாமக்கல்: நீட் தேர்வு எழுதிய மாணவி மாயம்.. தீவிரமாக தேடும் போலீஸ்!

நாமக்கலில், நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சின்ன அரியாகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்பாண்டியன். இவரது மகள் ஸ்வேதா 2019ல் 12ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். இந்நிலையில் அவர் மருத்துவத்தில் சேர்வதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி உள்ளார். கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் அவர் தோல்வி அடைந்தார்.  இந்நிலையில் மீண்டும் இந்த வருடம் நீட் தேர்வில் அவர் பங்கேற்றார். இரண்டாவது முறையாக நீட் எழுதிய நிலையில் ஸ்வேதாவை நேற்று காலை முதல் வீட்டில் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

அருகே எங்காவது சென்றிருக்கலாம் என்று பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் ஸ்வேதாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இது குறித்து மாணவியின் தந்தை நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வு ரிசல்டுக்கு பயந்து ஸ்வேதா எங்காவது சென்றாரா? அல்லது வேறு எதும் பிரச்னை இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலரிடமும் விசாரணை தொடர்கிறது


இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் நீட் தேர்வு காரணமாக உயிரிழப்புகள் தொடர்கின்றன. நீட் தேர்வுக்கு முதல்நாளே தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் 14ஆம் தேதி கனிமொழி என்ற மாணவியும், 1 5ஆம் தேதி சவுந்தர்யா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். ஒரு மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்டதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. நீட் தேர்வு தொடர்பாக அடுத்தடுத்து உயிரிழப்புகள் நடைபெறுவதைக் கருத்தில்கொண்டு, நீட் தேர்வெழுதிய அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"திருந்தி வாழ்கிறேன்" நம்ப வைத்து அழைத்து வந்து மனைவியை இரும்பால் தாக்கிக் கொன்ற கணவன்
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!
Crime: 22 வயது இளைஞருடன் காதல்..! கணவனின் தலையை துளைத்த தோட்டா - மனைவியின் பலே ப்ளான்
22 வயது இளைஞருடன் காதல்..! கணவனின் தலையை துளைத்த தோட்டா - மனைவியின் பலே ப்ளான்
மதுரை காவல்நிலைய தற்கொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்.. குடும்பத்தினர் நீதிமன்றம் நாட முடிவு !
மதுரை காவல்நிலைய தற்கொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்.. குடும்பத்தினர் நீதிமன்றம் நாட முடிவு !

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "உரிமையைப் பெற்றுத்தருவோம்.." மேகமலை, வருசநாடு மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் CTR நிர்மல்குமார்
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
Kanda Sashti: கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் கவனத்திற்கு! சூரசம்ஹாரத்திற்குப் பிறகு செய்ய வேண்டியவை என்ன?
கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் கவனத்திற்கு! சூரசம்ஹாரத்திற்குப் பிறகு செய்ய வேண்டியவை என்ன?
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!
IPL 2027: சேவாக் மகனுக்கு செம டிமாண்ட்! 2 கே கிட்ஸ்களை குறிவைக்கும் அணிகள்! எதிர்காலம்தான் முக்கியம்
IPL 2027: சேவாக் மகனுக்கு செம டிமாண்ட்! 2 கே கிட்ஸ்களை குறிவைக்கும் அணிகள்! எதிர்காலம்தான் முக்கியம்
திருவிழா தொடங்கியது! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்.. பக்தர்கள் பரவசம்!
திருவிழா தொடங்கியது! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்.. பக்தர்கள் பரவசம்!
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
Embed widget