மது போதையில் மனைவி, மாமியாரை சுத்தியால் கொடூரமாக தாக்கிய கணவன்! காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம், போலீசார் தீவிர தேடுதல்!
"காஞ்சிபுரத்தில் குடிக்க பணம் தராததால் மனைவி மற்றும் மாமியார் மீது கொலை வெறி தாக்குதல், உயிருக்கு போராடும் மாமியாருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது"

மது போதையில் குடிக்க காசு கேட்டு தராதால் மனைவி மற்றும் மாமியாரை சுத்தியால் அடித்து கொலை செய்ய முயன்ற போது, அருகே இருக்கும் குடியிருப்பு வாசிகள் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தவுடன் தப்பி ஓடிய கணவன் போலீசார் வலைவீச்சு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட மாமியார் மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குடும்பத் தகராறு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருகாளிமேடு பகுதியை சேர்ந்த குட்டி என்கின்ற லட்சுமணன் (56) என்பவர் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் உள்ள மாநகராட்சி குத்தகை கழிவறையில் சுத்தம் செய்யும் பணியை ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சந்தவளி (52) மற்றும் மாமியார் மூதாட்டி திலகவதி (75) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
லட்சுமணன் தினம்தோறும் குடித்துவிட்டு அதீத போதையில் வீட்டிற்கு வருகை தந்து தினந்தோறும் வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளனர். இதனால் அவ்வப்போது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று பள்ளிக்கு செல்வதாக சென்று விட்டு பிற்பகல் உணவு நேரத்தில், வீட்டுக்கு அதீத போதையில் வருகை தந்த லட்சுமணன் வீட்டில் இருந்த மனைவி மற்றும் மாமியார் ஆகியோரிடம் வழக்கம் போல் சண்டையிட்டு வந்துள்ளார்.
திடீரென்று சண்டை முற்றிய நிலையில் வீட்டு லக்ஷ்மணன் மற்றும் சந்தவளி ஆகியோர் ஒருவர் கூறுவர் கையால் தாக்கி கொண்டுள்ளனர். சண்டை இருவருக்கும் இடையே முற்றிய நிலையில் அதிக கோபம் அடைந்த லட்சுமணன் கையில் கிடைத்ததை எடுத்து அடித்த நிலையில் வீட்டிலிருந்த சுத்தியால் எடுத்து சந்தவளியை லட்சுமணன் பலமாக தாக்கி உள்ளார்.
சுத்தியால் கொலைவெறி தாக்குதல்
தாக்கியதுடன் மயக்கமடைந்த சந்தவளியை கொலை வெறியாக தொடர்ந்து சுத்தியால் தாக்கியதால் அதனை தடுக்க வந்த மூதாட்டி திலகவதியை சுத்தியாம் கொலவெறி தாக்குதல் ஈடுபட்டதால் அங்கேயே இருவரும் மயங்கி விழுந்தனர். மூதாட்டி அலறல் சட்ட கேட்டு அருகே குடியிருப்பு வாசிகள் வீட்டுக்குள் வருகை தந்த, போது லட்சுமணன் அவர்களிடமிருந்து தப்பி ஓடி உள்ளார்.
உடனடியாக தாலுகா போலீசருக்கு தகவல் அளித்து இரத்த வெள்ளத்தில் கலந்த இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தழும்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது மூதாட்டி சிகிச்சை பலனென்று மருத்துவமனையிலேயே பலியானார். மனைவி சந்தைவளி பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி
குடிபோதையில் குடிக்க பணம் கேட்டு பணம் தர மறுத்த மனைவி மற்றும் மாமியாரை சுத்தியால் கொலவெறியால், தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லட்சுமணனை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.





















