![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video | மாஸ்க்.. கையில் துப்பாக்கி.. நிதி நிறுவனத்தில் திடீரென புகுந்து ரூ.1 கோடியை திருடிச்சென்ற கும்பல்..
அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டிய அந்த மர்மநபர்கள் நிதி நிறுவனத்தில் இருந்த 1 கோடி ரூபாயை எடுத்துச் சென்றனர்.
![Watch Video | மாஸ்க்.. கையில் துப்பாக்கி.. நிதி நிறுவனத்தில் திடீரென புகுந்து ரூ.1 கோடியை திருடிச்சென்ற கும்பல்.. Mumbai Unidentified men robbed rs 1 crore gunpoint Mumbai office- Watch Video Watch Video | மாஸ்க்.. கையில் துப்பாக்கி.. நிதி நிறுவனத்தில் திடீரென புகுந்து ரூ.1 கோடியை திருடிச்சென்ற கும்பல்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/03/92ac49e2cf403778ea460761528de48e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மும்பையில் நிதி நிறுவனத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் ரூ.1 கோடியை கொள்ளையடித்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மும்பை முளுந் பகுதியில் உள்ள பாஞ்ச் ரஸ்டா என்ற இடத்தில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வட்டிக்கு கொடுப்பது வாங்குவது என எப்போதும் அங்கு பணம் புழங்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று திடீரென நிதி நிறுவனத்துக்குள் நுழைந்த 4 பேர் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டும், கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டும் அங்கிருந்தவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
#WATCH A case has been registered against 3 unidentified miscreants who robbed around Rs 1 crore from an office at 'gunpoint' in the Mulund area of Mumbai (02.02)
— ANI (@ANI) February 2, 2022
(Video Source: Mumbai Police) pic.twitter.com/vLoVdvrPcw
அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டிய அந்த மர்மநபர்கள் நிதி நிறுவனத்தில் இருந்த 1 கோடி ரூபாயை எடுத்துச் சென்றனர். கண்மூடி திறப்பதற்குள் படபடவென நடந்த இந்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.கேமரா காட்சியைக் கொண்டு போலீசார் தீவிரமாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)