பரிசோதனையில் அந்த இடங்களில் எல்லாம் தொட வைத்த பெண் - வீடியோ எடுத்து டாக்டரை மிரட்டிய கும்பல்
Mumbai Crime News: குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீடியோ மூலம் மருத்துவரை மிரட்டி ரூ.2 லட்சம் பறித்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்
டாக்டரிடம் பெண்ணை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மிரட்டி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
53 வயதான டாக்டரை வீடியோ எடுத்து மிரட்டியதாக இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களை மும்பை சார்கோப் போலீசார் கைது செய்தனர். சார்கோப்பில் உள்ள செக்டார் 3இல் கிளினிக் வைத்திருப்பவர் டாக்டர் சுதிர் ஷெட்டி. இவர், தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், 2 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்ததாகவும் போலீசாரிடம் புகார் அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட பெண்களில் ஒருவர் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி டாக்டரை அணுகி, மருத்துவ பரிசோதனை செய்தார். அப்போது டாக்டரிடம் உடலை காட்டி பரிசோதனை செய்ய சொன்னார். அப்போது அந்தப் பெண்ணின் கூட்டளிகள் மறைமுகமாக வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த பெண், டாக்டரிடம் ரூ.2.5 லட்சம் கொடுக்கவில்லை என்றால் வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டினார்.Case Against Suriya Jyothika: ஜெய்பீம் விவகாரம் - சூர்யா, ஜோதிகா உள்பட படக்குழு மீது வன்னியர் சங்கம் வழக்கு
அதன்பின்னர், கடந்த நவம்பர் 19ஆம் தேதி, அமித் மானே, தீபக் மானே மற்றும் மனோஜ் நாயுடு என அடையாளம் காணப்பட்ட மூன்று ஆண்களும் மற்றொரு பெண்ணும் அவரது கிளினிக்கிற்குள் நுழைந்து அவரை அடித்து துன்புறுத்தினர். அத்துடன் டாக்டரை தாக்கிவிட்டு ரூ.2 லட்சத்தை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர். பின்னர் டாக்டர் காவல்துறையை அணுகினார் என்று சார்கோப் காவல் நிலைய அதிகாரி கூறினார். BCCI Halal Meat: பீப்... ஃபோர்க்... சாப்பிட தடை... இந்திய வீரர்களுக்கு ‛ஹலால்’ உத்தரவு போட்ட பிசிசிஐ!
குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஆண்கள் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட இரு பெண்களுக்கும் காலையில் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அச்சுறுத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாதிக்கப்பட்டவரை தாக்கியதாக பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.DD Wedding | வைரலாகும் டிடியின் பாரீஸ் பயணம்.. ஹாட் போஸ்ட்.. லண்டனில் மாப்பிள்ளையா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்