குடமுழுக்கு விழாவுக்காக சீரியல் லைட் போட்ட கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்
ஆஞ்சநேயர் கோவில் குடமுழக்கு விழாவில் சீரியல் லைட்டுக்காக ஒயர் கட்டும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலையே மாணவர் உயிரிழப்பு.

காரைக்குடி அருகே பள்ளியில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை பொய்யாவயல் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு கைலாசம் - வளர்மதி தம்பதியின் மகன் சக்தி சோமையா (14) 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று (ஜன.24) வகுப்பறையில் கம்ப்யூட்டரை ஆன் செய்ய ஆசிரியர் கூறியதாகவும் அதனால் மாணவன் இணைப்பு ஒயரை பிளக்கில் மாட்டிய போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் படுகாயமடைந்த மாணவனை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சாக்கோட்டை காவல் துறையினர் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.





















