மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக தனது இடத்திற்கு பட்டா ஒதுக்கீடு செய்யவில்லை என குற்றம்சாட்டி தீக்குளிக்க முயன்ற இளைஞர் காவல்துறையினர் பத்திரமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அரசு வீட்டிக்காக அலையும் இளைஞர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திட்டை ஊராட்சியை சேர்ந்த ஜெகநாதன் - தையல்நாயகி தம்பதியரின் மகன் உமா சங்கர். இவர் இவரது சகோதரிகள் இருக்கு திருமணம் ஆகி சென்ற நிலையில், பெற்றோர் இறந்தை அடுத்து தனது தம்பியுடன் வசித்து அவர்கள் பெற்றோர் வாழ்ந்து வந்த குடிசை வீட்டில் வாழ்த்து வருகின்றார். இந்நிலையில் தனக்கு அரசு சார்பில் கட்டித் தரப்படும் வீட்டு திட்டத்திற்காக கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்.
Gautam Gambhir: புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முன் உள்ள சவால்கள் என்னென்ன? ஓர் அலசல்
அலைக்கழித்த அதிகாரிகள்
மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கும் விண்ணப்பித்துள்ளார். அவருக்கு வீடு ஒதுக்கிடு செய்யப்பட்டு பின்னர் அவர் வசிக்கும் இடத்திற்கு பட்டா இல்லாததால் அதனை முழுமையாக செயல்படுத்தமுடியாமல் போய் உள்ளது. இந்நிலையில் சூழலில் தான் அரசு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஊராட்சி மற்றும் வருவாய் துறை நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீ குளிக்க முயற்சி
இதனால் மனமுடைந்த உமாசங்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, அலுவலக வாயில் திடீரென்று மண்ணெண்ணையை எடுத்து தன் தலை மீது ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனை கண்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக செயல்பட்டு அதனை தடுத்து நிறுத்தி, உமாசங்கர் தலையில் தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் பட்டா வழங்ககோரி தீ குளிக்க முயன்ற சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.