தமிழகத்தற்கு தண்ணீர் வரும் சுரங்க கால்வாயில் விழுந்த யானை, தமிழக அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் தண்ணீர் நிறுத்தி யானை உயிருடன் மீட்கப்பட்டது.
தேனி மாவட்டம் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு விவசாயத்திற்காகவும், குடிநீருக்காகவும் கொண்டுவரப்படும் தண்ணீரானது சுமார் 2 கிலோமீட்டர் திறந்த வாய்க்கால் வழியாக வந்து, தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள தலைமதகு பகுதியிலிருந்து சுரங்க வாய்க்கால் வழியாக கொண்டு வரப்படுகிறது.
Accident: காலையிலே சோகம்! பேருந்தும், லாரியும் மோதியதில் 18 பேர் மரணம் - வேதனையில் ஆக்ரா
தற்போது அணையின் நீர்மட்டம் இன்று 121.80 அடியாக உள்ளதால் தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தேக்கடி வனப்பகுதியில் இருந்து இந்த திறந்த வாய்க்காலை கடந்து சென்ற யானை ஒன்று வாய்க்கால் தண்ணீரில் விழுந்துள்ளது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் யானை திறந்த வாய்க்கால் பகுதியில் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு ஷட்டர் பகுதிக்கு முன்னால் உள்ள இந்த கிரில் கம்பிகளில் சிக்கிக்கொண்டது.
Vikravandi bypoll 2024: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்களித்தார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா
இன்று காலை ஷட்டர்பகுதியில் யானை சிக்கி தண்ணீரிலிருந்து கரையேற முடியாமல் தவிப்பதை கண்ட தமிழக பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர்கள் நவீன்குமார், ராஜகோபால் இதுகுறித்து தமிழக அதிகாரிகளுக்கும், தேக்கடி கேரள வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதே நேரத்தில் தமிழக பொதுப்பணித்துறையினர் யானையை உயிருடன் மீட்பதற்காக தமிழகப்பகுதிக்கு திறக்கும் தண்ணீரை நிறுத்தினர்.
Vada Pav: அம்பானி வீட்டு உணவு விருந்து: ‘வடா பாவில் முடி’ - வீடியோவில் அதிர்ச்சி
இதனால் நீரின் இழுவை வேகம் குறைந்தது. இதனால் மிதக்க ஆரம்பித்த யானை, பின் தேக்கடி ஏரிப்பகுதிக்கு நீந்திச்சென்றது. சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வாய்க்காலில் நீந்திச்சென்ற யானை, ஆழம் குறைவான பகுதிக்கு சென்றதும் நடந்து கரையேறி வனப்பகுதிக்குள் சென்றது. துரிதமாக செயல்பட்டு யானையை காப்பாற்ற முழு முயற்சி எடுத்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் பொதுமக்களும், வனவிலங்கு ஆர்வலர்களும் நன்றி தெரிவித்தனர்.