Yezhu Kadal Yezhu Malai: மறுபடியும் நீ.. என் தோழி ஆவாயா..! மனதை உருக்கும் ஏழு கடல் ஏழு மலை முதல் பாடல் ரிலீஸ்

இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தனமான இன்று அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. 
 
தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைசொல்லியான இயக்குநர் ராம் தற்போது எடுத்திருக்கும் படம் ஏழு கடல் ஏழு மலை. நிவின் பாலி மற்றும் அஞ்சலி நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்‌ஷன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். 4000 ஆண்டு கால காதலை கூறும்படிமாக ஏழுமலை, ஏழு கடல் இருக்கும் என்ற அதன் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் கூறுகின்றன. 
 
ரயிலில் நகரும் கதையில் அஞ்சலியிடம் தனது கனவு காதலை நிவின்பாலி விவரித்து வருகிறார். தனதுக்கு 8 ஆயிரத்தை விட அதிக வயதாகிறது என்று கூறி அதிர்ச்சி அளிக்கும் நிவின்பாலி காதலில் உருகுகிறார். காதல் மட்டுமில்லாமல் தனிமனித நெருக்கடி, உலகமயமாதல் உள்ளிட்டவற்றை கூறும் ஏழு கடல் ஏழுமலை படம் பல்வேறு விருதுகளையும் பெற்று வருகிறது. 
 

‘ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகி இருந்தது. இந்த நிலையில் ஏழுமலை ஏழு கடல் படத்தின் முதல் பாடலான ‘மறுபடி நீ’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகரும் பாடகருமான சித்தார்த் பாடியுள்ளார். இந்த பாடல் மெலடி பாடலாக உள்ளதால், பெரும்பான்மையான ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. 
Continues below advertisement
Sponsored Links by Taboola