ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின்  நேற்றைய எபிசோடில் சுடருக்கு கனகவல்லி வேலை கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது, கனகவல்லி எழிலுக்கு போன் போட்டு கேர் டேக்கரை வேலைக்கு எடுத்தாச்சு என்று விஷயத்தை சொல்ல பக்கத்தில் இருந்து இதை கேட்ட மனோகரி கடுப்பாகிறாள், புதுசா வந்திருக்கவ யாருனு பார்க்கணும் என்று முடிவெடுக்கிறாள். 


இதனை தொடர்ந்து இங்கே பசியில் தவிக்கும் சுடர் கனகவல்லியிடம் சென்று சாப்பிட சொல்ல அவள் நான் சாப்பிட டைம் ஆகும், எப்பயும் ஒரே டைம்ல தான் சாப்பிடுவேன் என்று சொல்வதோடு சுடரின் பசியை புரிந்து கொள்ளும் கனகவல்லி உனக்கு பசித்தா சாப்பிடு என்று சொல்ல இல்ல நான் குழந்தைகளோட சேர்ந்து சாப்பிடுறேன் என்று சொல்கிறாள். 


ஆனால் கனகவல்லி உன் முகத்துலயே பசி தெரியுது என்று சாப்பிட சொல்ல சுடரும் சாப்பிடுகிறாள். இந்த நேரத்தில் குழந்தைகள் சுடரை டார்ச்சர் செய்ய பிளான் போட்டு சாப்பிட்டு மேல வந்ததும் டிவி போட்டு சேரில் உட்காரும் போது கீழே விழுந்து விட ஏற்பாடு செய்கின்றனர். சுடரும் சேரில் உட்கார போகும் நேரத்தில் மனோகரி உள்ளே வந்து விடுகிறாள். 


சுடர் யார் நீங்க என்று கேட்க மனோகரி கோபப்பட செல்வி மனோகரி பற்றி சொல்கிறாள், பிறகு அவள் சுடரை உட்கார சொல்ல இவள் நீங்க உட்காருங்க என்று சொல்லி கொண்டிருக்க ஒரு கட்டத்தில் மனோகரி உட்காரு என்று அதட்ட சுடரும் உட்கார போக பசங்க இப்போ சுடர் கீழே விழுந்தா மனோகரி அவங்களை வெளியே துரத்திடுவாங்க என்று பிளான் போட்டு சுடரிடம் பாசமாக பேசி உள்ளே அழைத்து சென்று விட மனோகரி அந்த சேரில் உட்கார கீழே விழுகிறாள். இதை பார்த்து சுடர் விழுந்து விழுந்து சிரிக்க மனோகர் உச்சகட்ட டென்ஷன் ஆகிறாள். 


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.