வெற்றிலை வியாபாரியிடம் ரூ.12 லட்சம் வழிப்பறி - சீர்காழியில் தொடரும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் அச்சம்

சீர்காழியில் நடந்து சென்ற வெற்றிலை வியாபாரியிடம் 12 லட்சம் ரூபாயை இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் பிடிங்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சீர்காழியில் நடந்து சென்ற வெற்றிலை வியாபாரியிடம் 12 லட்சம் ரூபாயை இருசக்கர வாகனத்தில் வந்த திருடர்கள் பிடுங்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

வெற்றிலை வியாபாரியிடம் கொள்ளை

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் 50 வயதான மாரியப்பன். இவர் வெற்றிலை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். சிதம்பரம் மற்றும் சீர்காழி தாலுக்கா முழுவதும் உள்ள கடைகளுக்கு தினந்தோறும் வெற்றிலை விற்பனை செய்து விட்டு, விற்பனை பணத்தை வாரந்தோறும் கடைகளில் வசூல் மொத்தமாக பெற்று கொண்டு சிதம்பரத்திற்கு பேருந்தில் எடுத்துச் செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளார். 

TN School Reopen: கொளுத்தும் வெயில்; பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு? விரைவில் வெளியாகும் அறிவிப்பு

இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளையர்கள் 

இந்த நிலையில் வழக்கம்போல சீர்காழி கடைவீதி பகுதியில் உள்ள கடைகளில் வெற்றிலை பணத்தை வசூல் செய்து ரூபாய் 12 லட்சத்தை பையில் வைத்து நடந்து கடைவீதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் மாரியப்பன் வைத்திருந்த பணப் பையை பிடுங்கி கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து சென்றுள்ளனர்.

பங்குச்சந்தையில் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை! ரூபாய் 26 லட்சத்தை பறிகொடுத்த முதுகலை பட்டதாரி!

காவல்துறையினர் விசாரணை 

இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த மாரியப்பன் கூச்சலிட்டுள்ளார்.  உடன் அருகில் இருந்தார்கள் அந்த இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.  சீர்காழி நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக சென்றதால் அவர்களை பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, இதுகுறித்து மாரியப்பன் சீர்காழி காவல் நிலையத்தில் ரூபாய் 12 லட்சம் வழிபறி செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட சீர்காழி காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Prakash Raj: “தியானம் மாதிரி தெரியல.. நாடகம் மாதிரி இருக்கு” - பிரதமர் மோடியை விமர்சித்த பிரகாஷ்ராஜ்!

பொதுமக்கள் கோரிக்கை 

சீர்காழி நகரில் கடந்த சில மாதங்களாக நாள்தோறும் வீடு, கடை, வழிப்பறி என ஏதோம் ஒரு வகையில் திருட்டு கொள்ளைச் சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. ஆனால் இதுநாள் வரை திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்களை காவல்துறையினர் பிடிக்காமல் திணறி வருகின்றனர். இதனால் சீர்காழி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சீர்காழி  மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இது தொடர்பாக சிறப்பு தனிப்பட்ட அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Crime: ரீல்ஸ் மூலம் ஆண் நண்பருடன் பழக்கம்! கொலை வழக்கில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது - என்ன நடந்தது?

Continues below advertisement
Sponsored Links by Taboola