Crime: வேறு சாதி நபருடன் திருமணம்.. இளம்பெண் ஆணவப்படுகொலை.. உத்தரபிரதேசத்தில் கொடூரம்..!
உத்தர பிரதேசத்தில் வேறு சாதி நபரை திருமணம் செய்த இளம்பெண்ணை, அவரது மாமா கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: உத்தர பிரதேசத்தில் வேறு சாதி நபரை திருமணம் செய்த இளம்பெண்ணை, அவரது மாமா கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ஆணவப்படுகொலை சம்பங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் இளைஞர் ஒருவரை நடுரோட்டில் வெட்டி ஆணவப்படுகொலை செய்து சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது இதை கொடூரம் உத்தர பிரதேசத்திலும் அரங்கேறி உள்ளது.
திருமணம்:
உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் புடான் சிங் தோமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 20 வயதில் மகள் உள்ளார். இந்த இளம்பெண் அதே பகுதியைச் சேர்ந்த ரூப் சந்திர மௌரியா என்ற இளைஞரை காதலித்து வந்ததுள்ளார். அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே இந்த இளைஞருக்கு திருமணம் நடந்து விவாகரத்து நடந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும், அந்த பெண்ணும் இளைஞரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். பின்னர், கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இளம்பெண்ணை காசியாபாத் நகருக்கு ரூப் சந்திர வருமாறு கூறியுள்ளார. காசியாபாத்தில் உள்ள ஒரு கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், அவர்கள் வசித்து வந்த கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவரவர்களின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் வீட்டில் அனுமதிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் இவர்கள் இருவரும் கிராமத்திற்கு வெளியே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிகிறது.
கொலை:
பின்னர், ஒரு நாள் அந்த பெண் தங்கிருந்த வீட்டிற்கு அவரது மாமா சென்றுள்ளார். அப்போது பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரை வெளியே இழுத்துச் சென்று கொலை செய்துள்ளார். இதனை அடுத்து, இளம் பெண்ணின் மாமா, அவரது மகன் உள்பட அந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது ரூப் சந்திரா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து, போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இளம்பெண்ணை கொலை செய்த நபர் ஆயதங்களுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இவரிடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு சாதி நபரை இளம்பெண் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில் அவரது மாமா கொலை செய்துள்ளது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Crime: கடனை திருப்பி கேட்ட தோழி... துண்டு, துண்டாக வெட்டி புதைத்த நண்பன்..! கேரளாவில் கொடூரம்..!