மேலும் அறிய

வயதான நபருடன் தொடர்பு.. மனைவியை கொன்ற கணவன்.. ஃப்ரிட்ஜில் இருந்த தலை.. நடந்தது என்ன?

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அசாம் மாநிலத்தில் வேறொருவருடன் தொடர்பில் இருந்த மனைவியை கணவர் தலையைத் துண்டித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கொடூர சம்பவமானது அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 6ம் தேதி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்குள்ளவர்களிடம் சம்பந்தப்பட்ட வீட்டில் தங்கியிருந்தவர்கள் பற்றி விசாரித்தனர். 

அப்போது  ராமானுஜ் கோஸ்வாமி - ரியா தாலுக்தார் என்ற சமீபத்தில் திருமணமான தம்பதியினர் வசித்து வந்ததாகவும், அவர்களை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்றும், துர்நாற்றம் வந்ததால் இருவரின் செல்போனுக்கு அழைத்து பார்த்தால் சுவிட்ச் ஆஃப் என வருவதாகவும் கூறினார். இதனால் சற்றும் தாமதிக்காமல் போலீசார் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு கண்ட காட்சிகள் போலீசார் மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்தினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. 

அந்த வீட்டின் ஒரு அறையில் தலையில்லாமல் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது. அந்த சடலத்தின் விரல்கள் பகுதியளவு துண்டிக்கப்பட்டு கிடந்தது. சடலம் அழுகத் தொடங்கியதன் விளைவே துர்நாற்றம் வீசி வெளியே விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து வீடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் அந்த பெண்ணின் தலை ஃப்ரிட்ஜிக்குள் இருந்தது . அதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் கொலை செய்யப்பட்டது ரியா தாலுக்தார் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் கணவர் ராமானுஜ் கோஸ்வாமி காணாமல் போனதால் போலீசாரின் சந்தேகப் பார்வை அவர் பக்கம் திரும்பியது. 

ராமானுஜ் கோஸ்வாமி எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் எதனால் இந்த கொலை நடைபெற்றது என தெரியாமல் போலீசார் குழம்பினர். எனினும் வழக்குப்பதிவு செய்து ராமானுஜ் கோஸ்வாமியை தீவிரமாக தேடி வந்தனர். அவரை கடைசியாக செப்டம்பர் 4ம் தேதி இரவு தனது வீட்டின் அருகே பார்த்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதனிடையே செப்டம்பர் 6ம் தேதி இரவு அவர் போலீசார் சரணடைந்தார். இதற்கிடையில்  ரியா தாலுக்தார் உடலும், தலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தது. போலீசார் ராமானுஜ் கோஸ்வாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவரை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறைக்கு ராமானுஜ் கோஸ்வாமி அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது, தனது மனைவியை கொன்று விட்டேன் எனவும், சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அந்த சுகர் டாடியையும் கொல்வேன் எனவும் ஆவேசமாக கத்தினார். அந்த நபரை அடையாளம் காட்டுமாறு செய்தியாளர்கள் கேட்டபோது அவர் ஆவேசமாக நடந்துக் கொண்டார். இதன்மூலம் தகாத உறவு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

என் புருஷன் உனக்கு கேட்குதாடி? சாணியை கரைத்து ஊற்றி தாக்குதல்! கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம்!
என் புருஷன் உனக்கு கேட்குதாடி? சாணியை கரைத்து ஊற்றி தாக்குதல்! கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம்!
" வேறொருவருக்கு வைத்த குறி - ஆள்மாறி நடந்த கொடூரம் " மதுபான கடையில் நேர்ந்த சோகம்
கள்ளக் காதல் தகராறில் இளைஞர் வெட்டி கொலை - 30 நிமிடங்களில் சினிமா பாணியில் சிக்கிய கொலையாளிகள்
கள்ளக் காதல் தகராறில் இளைஞர் வெட்டி கொலை - 30 நிமிடங்களில் சினிமா பாணியில் சிக்கிய கொலையாளிகள்
கள்ளக்காதலன் ஹெல்ப்பில் கணவனை கொன்று காட்டில் புதைத்த மனைவி...காட்டிக்கொடுத்தது யார்? சிக்கியது எப்படி?
கள்ளக்காதலன் ஹெல்ப்பில் கணவனை கொன்று காட்டில் புதைத்த மனைவி...காட்டிக்கொடுத்தது யார்? சிக்கியது எப்படி?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
TN Govt: சிபாரிசுன்னு வந்துடாதிங்க..! அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை, மீறினால் ஆப்பு தான் - முழு விவரம்
சிபாரிசுன்னு வந்துடாதிங்க..! அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை, மீறினால் ஆப்பு தான் - முழு விவரம்
TN Weather News: லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
TN Govt: எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
Bayon Vs Creta: க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
Embed widget