மேலும் அறிய

திருமண மண்டப லிஃப்ட் விபத்து! ஜாமினுக்கு வாய்ப்பில்லை? ஜெயக்குமார் மகள் மீது பாயும் வழக்கு!!

கும்மிடிப்பூண்டி அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் ஏற்பட்ட விபத்தில் 11ம் வகுப்பு மாணவன் தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஜெயக்குமார். அவரது மகள் ஜெயப்பிரியா. ஜெயப்பிரியாவின் கணவர் பெயர் நவீன். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அமைந்துள்ளது பெத்திக்குப்பம். இந்த கிராமத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமாக லிப்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட பிரம்மாண்ட திருமண மண்டபம் ஒன்று உள்ளது.

இந்த நிலையில், இந்த திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உணவு பரிமாறும் வேலைக்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்களில் காஞ்சிபுரம் வாலாஜபாத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் சீத்தல் (வயது 19), திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயராமன், (வயது 23), விக்னேஷ் (வயது 21) ஆகியோரும் வந்துள்ளனர்.


திருமண மண்டப லிஃப்ட் விபத்து! ஜாமினுக்கு வாய்ப்பில்லை? ஜெயக்குமார் மகள் மீது பாயும் வழக்கு!!

அப்போது, கீழே இருந்து சமைக்கப்பட்ட உணவுகளை பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சீத்தல், ஜெயராமன் மற்றும் விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் லிப்டில் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது, எடை தாங்காமால் லிப்டின் இரும்பு கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதில், பள்ளி மாணவரான சீத்தல் பரிதாபமாக தலைநசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

அவருடன் லிப்டில் இருந்த ஜெயராமனுக்கும், விக்னேஷிற்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஜெயராமனையும், விக்னேஷையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்த சீத்தலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


திருமண மண்டப லிஃப்ட் விபத்து! ஜாமினுக்கு வாய்ப்பில்லை? ஜெயக்குமார் மகள் மீது பாயும் வழக்கு!!

11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வரும் சூழலில், குடும்ப வறுமை காரணமாக சமையல் வேலைக்கு சென்ற மாணவர் தலைநசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசர், மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக முன்னாள் அமைச்சர் மகள் ஜெயப்பிரியா மீதும் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது: நகைகள் மற்றும் பைக் பறிமுதல்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது: நகைகள் மற்றும் பைக் பறிமுதல்!
மனைவி, மகனை அடித்துக் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் கோரப் பின்னணி!
மனைவி, மகனை அடித்துக் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் கோரப் பின்னணி!
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறய முதியவர்; குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீசார்.. 
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறய முதியவர்; குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீசார்.. 
என் புருஷன் உனக்கு கேட்குதாடி? சாணியை கரைத்து ஊற்றி தாக்குதல்! கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம்!
என் புருஷன் உனக்கு கேட்குதாடி? சாணியை கரைத்து ஊற்றி தாக்குதல்! கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
Embed widget