மேலும் அறிய
Advertisement
காய்கறி கடை வியாபாரி அரிவாளால் வெட்டிக் கொலை - தடுக்க முயன்ற மனைவிக்கு வெட்டு..
இவரது கடைக்கு அருகில் பிளாட்பார கடை நடத்தி வரும் ஆனந்த் மற்றும் அரவிந்த் ஆகியோருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது
சென்னை எருக்கஞ்சேரி பகுதியில் வசித்து வரும் கோபி என்பவர் கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் காய்கறி கடை மற்றும் மலர் நிலையம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் பிளாட்பார கடை நடத்தி வரும் ஆனந்த் மற்றும் அரவிந்த் ஆகியோருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று மாலையில் தகராறு பெரிதானதால் ஆனந்த் மற்றும் அரவிந்த் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து கோபியை கத்தியால் வெட்டியதில் கோபி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இச்சம்பவத்தை தடுக்க முயன்ற கோபியின் மனைவி லதாவிற்கு வலது கையில் வெட்டு காயங்களுடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடுங்கையூர் காவல் துறையினர் கோபியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து இவர்களை கொலை செய்த ஆனந்த் மற்றும் அரவிந்த் மற்றும் இவர்களது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நாங்கள் ரவுடிகள் எங்களிடமே பணம் கேட்கிறாயா? - பிரியாணி கடை மேலாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடிகள் கைது
சென்னை கொளத்தூர் மூகாம்பிகை பஸ் நிறுத்தம் அருகே தனியாருக்கு சொந்தமான பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் சென்னை பெரம்பூரை சேர்ந்த தயாநிதி என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது உணவகத்திற்கு பிரியாணி சாப்பிட சென்னை அடுத்த செங்குன்றம் சோலையம்மன் நகரைச் சேர்ந்த குமார் என்கிற வாட்டர் வாஷ் குமார் (31) என்பவரும் பாடியில் உள்ள பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த கோபிநாத் (25) ஆகிய இருவரும் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் மேலாளர் தயாநிதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் ரவுடிகள் எங்களிடமே பணம் கேட்கிறாயா? என கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் 1500 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து இருவரும் தப்பித்து ஓடினர். மேலும் கடையில் உள்ள டிவி அலங்கார பொருட்களையும் கத்தியால் அடித்து உடைத்து நாசப்படுத்தினர்.
இச்சம்பவத்தை உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் பார்த்து அங்கிருந்து பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது சம்பந்தமான சி.சி.டி.வி கண்காணிப்பு பதிவு உள்ளதையும் வைத்து உணவக மேலாளர் தயாநிதி கொளத்தூர் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட கொளத்தூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு ரவுடி ஒழிப்பு போலீசாருக்கு தெரிப்படுத்தியதில் உடனடியாக போலீசார் களத்தில் இறங்கி செங்குன்றத்தை சேர்ந்த பிரபல ரவுடி குமார் என்கின்ற வாட்டர் வாஷ்குமார் மற்றும் பாடி கோபிநாத் ஆகிய |இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்ததில் இவர்கள் இருவரின் மீதும் சென்னை மற்றும் புறநகரில் உள்ள காவல் நிலையில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
ஐபிஎல்
க்ரைம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion