Kerala Rape Murder Case: வன்கொடுமையில் மயங்கிய சிறுமி; உயிரிழக்கும் முன் தூக்கில் ஏற்றிய இளைஞர்; கேரளாவில் ‛திக் திக்’ கொலை!
கேரளாவில் 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, சினிமா பாணியில் தடயத்தை அழிக்க நினைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சுரக்குளம் எஸ்டேட் தேயிலை தோட்ட கூலி தொழிலாளர்களான கண்ணன்-பிரேமா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மூத்த மகன் கபில் 12ஆம் வகுப்பு பயின்று வருகின்றார். இரண்டாவது குழந்தை 6 வயது சிறுமி கனிஷ்கா, கடந்த மாதம் 30 ஆம் தேதி தம்பதி வேலைக்குச் சென்ற நிலையில், அண்ணன் கபில் சலுான் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளர்.
வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டபட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த கபில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தங்கை தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த பொழுது ஒரு வேளை சிறுமி கழுத்து இறுகி இறந்து இருக்கலாமோ என சந்தேகம் கொண்டனர். அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவிக்கவே வண்டிப்பெரியாறு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றி, இடுக்கி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குகொண்டு சென்றனர். இதற்கிடையில் சிறுமியின் இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர் வண்டிப்பெரியாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில், சிறுமியை யாரோ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சுரக்கும் எஸ்டேட் பகுதியில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் குடியிருந்து வரும் தோட்டத் தொழிலாளிகள் ஒவ்வொருவராக விசாரணையில் ஈடுபட்டனர் . சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அர்ஜுன்(22) என்பவரை விசாரணை மேற்கொண்ட பொழுது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே சந்தேகமடைந்த காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று முறையான விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சிறுமியை கடந்த மூன்று வருடங்களாக பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், சம்பவம் நடந்த அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை முன் பக்க வாசல் வழியாக வீட்டிற்குள் நுழைந்து தகராத உறவுக்கு அழைத்த போது, சிறுமி கதறியதாகவும். சத்தம் போட்டால் பிரச்னை ஆகும் என்பதால் சிறுமியின் வாயை மூடியபோது மயக்கம் அடைந்ததாகவும். மயக்கமடைந்த சிறுமி இறந்து விட்டதாக நினைத்து, அந்த வீட்டு அறையில் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றில் சிறுமியின கழுத்தை கட்டி தொங்க விட்டுவிட்டு பூட்டிய கதவை பூட்டி படியே விட்டுவிட்டு அருகில் உள்ள அறையில் இருந்த ஜன்னலை திறந்து வெளிப்புறமாக குதித்து தப்பி சென்றதாகவும்,’ கூறினார். சிறுமியின் அண்ணன் கதவை உடைத்த போது, அவனுக்கு உதவுவதைப் போல் வீட்டிற்குள் வந்து, தப்பி செல்லவதற்கு திறந்த ஜன்னலை பூட்டி விட்டதாகவும், இதனால் எந்த சந்தேகமும் வராதவாறு பார்த்துக் கொண்டதாக கூறிய அர்ஜூன், அதன் பின் தானும் சோகமாய் நாடகமாடிய கதையை கூறினார். அதிர்ந்து போன போலீஸ், அர்ஜுனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். வெளியில் சிறுமியிடம் அண்ணன் போல் பழகி வந்த அர்ஜூன், மூன்று வருடமாக அவரை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம், அப்பகுதியினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.