மேலும் அறிய

Karur: தகாத உறவில் சென்ற கணவனை மீட்டு கொடுங்கள் - மகளிர் காவல் நிலையத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் போராட்டம்..!

குடும்பத்தை சரிவர கவனிக்காமல் வேறு பெண்ணுடன், தகாத உறவில் சென்ற கணவனை மீட்டுத் தரக் கோரி காவல் நிலையத்தில் தனது நான்கு மகனுடன் கண்ணீர் சிந்திய இளம்பெண்.

குடும்பத்தை சரிவர கவனிக்காமல் வேறு பெண்ணுடன் சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் தரையில் அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுத பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


Karur: தகாத உறவில் சென்ற கணவனை மீட்டு கொடுங்கள் - மகளிர் காவல் நிலையத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் போராட்டம்..!

திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி, அருணாச்சல நகரை சேர்ந்தவர் நாகராணி (33). இவரது கணவர் மோகன்ராஜ். நாகராணிக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 15 வயதில் இரட்டை சகோதரர்களான மகன்கள், 10 வயதில் ஒரு மகன், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

தாய், தந்தையை இழந்த நாகராணி பாட்டி வளர்ப்பில் வளர்ந்துள்ளார். திருமணத்தின் போது வரதட்சணையாக 16 பவுன் தங்க நகையும், ஒரு லட்சம் ரொக்கமும் சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், குறுக்கு சாலையில் வசித்து வரும் மோகன்ராஜ் கரூர் மாவட்டம், வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணுடன் தகாத உறவு வைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடமாக தகாத உறவு வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை சரி வர கவனிக்காமல் கைவிட்டதாக கூறப்படுகிறது .

 


Karur: தகாத உறவில் சென்ற கணவனை மீட்டு கொடுங்கள் - மகளிர் காவல் நிலையத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் போராட்டம்..!

தகாத உறவில் சென்ற கணவனை மீட்டுத் தரக் கோரி காவல் நிலையத்தில் தனது நான்கு மகனுடன் நாகராணி கண்ணீர் சிந்தினார். இது சம்பந்தமாக, இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நாகராணி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அங்கிருந்து நாகராணியை கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் போலீசார் தரப்பில் எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை என்று கூறி, மகளிர் காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் தரையில் அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதுள்ளார். இது தொடர்பான  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 


Karur: தகாத உறவில் சென்ற கணவனை மீட்டு கொடுங்கள் - மகளிர் காவல் நிலையத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் போராட்டம்..!

கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போல் வரதட்சணைக் கொடுமையால் வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்த நிலையில் புகாரை காலதாமதமாக பெற்றதாகக் கூறி குடும்பத்துடன் அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தனது கணவரை மீட்டுத் தரக்கோரி அதே காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget