Crime: கரூரில் கொத்தனாரை கொன்ற வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது
கொத்தனாரை கொன்ற வழக்கில் கூலிப்பணத்தை தராததால் தீர்த்துக்கட்டியதாக கைதான மூன்று பேர் வாக்குமூலம் அளித்தனர்.
கரூரி கொத்தனாரை கொன்ற வழக்கில் சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் அருகே கொத்தனாரை கொன்ற வழக்கில் கூலிப்பணத்தை தராததால் தீர்த்துக்கட்டியதாக கைதான சிறுவன் உட்பட மூன்று பேர் வாக்குமூலம் அளித்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கல்லடை தெற்கு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் கொத்தனார். இவருக்கு கோமதி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி நள்ளிரவில் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிள் வெளியே சென்றார். அப்போது,திருச்சி தோகைமலை மெயின் ரோட்டில் பெரிய கடத்துப்பட்டி வளைவு பகுதியில் மோகன்ராஜை வழிமறித்து மூன்று பேர் அறிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
இது தொடர்பாக தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து கொன்றவர்களை வந்த நிலையில் மோகன்ராஜ் கொலை தொடர்பாக திருச்சி மாவட்டம் போசம்பட்டி கிராமம் கிறுக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த கிஷோர், கரூர் மாவட்டம் நச்சலூர் காந்தி நகர் பகுதியில் சேர்ந்த ஜீவா, சிறுவன் ஆகிய மூன்று பேரை பிடித்து தோகை மலை போலீசார் கிடுக்கு பிடி விசாரணை நடத்தினார். அப்போது மூன்று பேரும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், மோகன்ராஜ், கிஷோர், ஜீவா, சிறுவன் ஆகிய நான்கு பேரும் சிவகிரியில் ஒன்றாக வேலை செய்துள்ளனர் .
இதில், வேலை பார்த்த வகையில் கூலி பணத்தை மோகன்ராஜ் 3 பேருக்கும் கொடுக்கவில்லையாம். இது குறித்து மூன்று பேரும் அவரிடம் பலமுறை கேட்டும் தரவில்லையாம், இதனால் ஆத்திரம் அடைந்த கிஷோ,ர் ஜீவா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சம்பவத்தன்று நள்ளிரவு மோகன்ராஜை செல்போனில் அழைத்து வரவழைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். பின்னர் கிஷோர் ஜீவா மற்றும் 17 வயது சிறியவன் ஆகிய மூன்று பேரையும் தோகை மலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவின்படி 17 வயது சிறுவனை திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் கிஷோர், ஜீவா ஆகியோரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.