மேலும் அறிய

அடப்பாவிகளா! காயத்திற்கு பெவிகால் போட்ட நர்ஸ்! சிறுவனுக்கு நிகழ்ந்த சோகம்

கன்னத்தில் காயம்பட்ட சிறுவனுக்கு பெவிகால் தடவி செவிலியர் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது ஹவேரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல் தாலுகாவில் ஆடுரு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜோதி என்ற செவிலியர் ஒருவர் பணியாற்றி வந்தார். 

பெவிகால் சிகிச்சை:

இந்த பகுதியில் பெற்றோர்களுடன் வசித்து வருபவர் குருகிஷன் அன்னப்பா ஹோசமணி என்ற 7 வயது சிறுவன் வசித்து வருகிறான். கடந்த 14ம் தேதி இந்த சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அவனுக்கு கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவனை அருகில் இருந்த ஆடுரு சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அப்போது பணியில் செவிலியர் ஜோதி இருந்தார். அவர் காயம்பட்ட சிறுவனுக்கு மருந்திற்கு பதிலாக பெவிகால் ( பசை) தடவி அதன் மேல் பேண்ட் எய்ட் ஒட்டியுள்ளார். இதன்பின்னர், சிறுவன் வீட்டிற்குச் சென்றபோது அவனது பெற்றோர்கள் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

அலட்சிய பதில்:

பின்னர், அவரது வீட்டிற்கு அந்த சிறுவனின் பெற்றோர்கள் சென்று கேள்வி எழுப்பினர். அப்போது, செவிலியர் ஜோதி தனக்குத் தெரிந்ததை வைத்துதான் சிகிச்சை அளித்ததாகவும், தான் எப்போதும் இப்படித்தான் சிகிச்சை அளிப்பதாகவும் பதில் அளித்துள்ளார். இதைக்கேட்ட சிறுவனின் பெற்றோர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நடந்த அனைத்தையும் அவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். 

இந்த வீடியோவை சுகாதாரத்துறையினருக்கு அனுப்பி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஜோதி தற்போது கட்டல் சுகாதார மையத்திற்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காயம்பட்ட சிறுவனுக்கு மருந்திற்கு பதிலாக பெவிகுவிக் வைத்து சிகிச்சை அளித்த விவகாரம்  பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில்  ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அந்த சுகாதார பணியாளர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

இந்த விவகாரத்தை பலரும் இணையத்தில் பகிர்ந்து கர்நாடகாவில் இதன்பின்பு இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
" பேனர் வைப்பதில் தகராறு " ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப் பகலில் வெட்டிப் கொலை
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Embed widget