மேலும் அறிய

காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலை- ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது

’’காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலையில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கூலிப்படையினர் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்’’

புதுச்சேரி மாநிலம்  காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலையில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையினர் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். காரைக்கால் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் தேவமணி (53). மாவட்ட பா.ம.க. செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து வந்தார். திருநள்ளாறு மெயின் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதே பகுதியில் கட்சி அலுவலகம் இருந்தது. 

காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலை- ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது

இந்தநிலையில் கடந்த 22ஆம் தேதி இரவு கட்சி அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்ற அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தேவமணிக்கும் அவரது வீட்டுக்கு எதிரே உள்ள இடம் தொடர்பாக மணிமாறன் என்பவருக்கும் அடிக்கடி அடிதடி சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. இந்த தகராறில் தான் தேவமணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலை- ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், போலீஸ் சூப்பிரண்டுகள் ரகுநாயகம், வீரவல்லபன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லெனின் பாரதி, பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து, தேவமணியை கொலை செய்த கும்பலை தேடிவந்தனர். இந்த நிலையில், கொலை நடந்த மறுநாள் முக்கிய குற்றவாளியான மணிமாறனை (28) பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வந்தனர்.

காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலை- ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது

இதில், மணிமாறனுக்கு உடந்தையாக அவரது நண்பர்களான திருநள்ளாறு அரங்கநாதர் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி (59), மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, இலுப்பூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (54), மயிலாடுதுறை கூட்டுறவு நகர் 3 வது குறுக்கு தெருவை சேர்ந்த அருண் (31) மற்றும் சார்லஸ் ஆகியோருக்கு தேவமணி கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதாவது இவர்கள் 5 பேரும் சேர்ந்து 6 பேர் கொண்ட கூலிப்படையினரை ஏவி தேவமணியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மணி மாறன், கலியமூர்த்தி, ராமச்சந்திரன், அருண் ஆகிய 4 பேரை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தேவமணி கொலையில் தொடர்புடைய சார்லஸ் மற்றும் கூலிப்படையினர் 6 பேரை போலீசார் வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!

EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 

Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!

அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
10 ஆயிரம் பேருக்கு மணக்க, மணக்க மட்டன் பிரியாணி; மதுரையே மிரண்ட பிரம்மாண்ட விருந்து

டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்

Embed widget