Crime : காதலிக்கும்போது கொடுத்த பரிசுப் பொருட்களை திருப்பிக்கேட்ட காதலன்.. ஆள்வைத்து தாக்கிய இளம்பெண்
கன்னியாகுமரி அருகே காதலிக்கும்போது கொடுத்த பரிசு பொருட்களை திரும்பக்கேட்ட முன்னாள் காதலனை மாணவி கூலிப்படையை படைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் பகுதிகை சேர்ந்தவர் பிரவீன். டிப்ளமோ முடித்து வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும், அணக்கரை பகுதியை சேர்ந்த 19 வயதான ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவியும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆன்லைன் வாயிலாக தொடங்கிய பழக்கம், நாளடைவில் நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்தநிலையில், ஜெஸ்லின் பிரவீனிடம் தனது வீட்டிற்கு பெண் கேட்டு வரும்படி கூறியுள்ளார். காதலியின் பேச்சை தட்டாமல்கேட்ட பிரவீனும், தனது பெற்றோரு அந்த பெண்ணின் வீட்டிற்குசென்று பெண் கேட்டுள்ளார். இதையடுத்து, இரு வீட்டார் சம்மதித்த நிலையில் இரண்டு வருடத்திற்கு பிறகு திருமணம் செய்து வைக்கலாம் என ஜெஸ்லின் வீட்டார் தெரிவித்துள்ளனர்.
இரு வீட்டார் சம்மதம் தெரிவித்ததால் காதல் ஜோடி, கணவன் - மனைவி போல் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று, வருங்கால அன்பு துணைக்கு பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.
இந்த சூழலில், ஜெஸ்லின் கடந்த ஒரு மாதமாக பிரவீன் உடன் பேச மறுத்து வந்துள்ளார். இதன் சந்தேகமடைந்த பிரவீன், ஜெஸ்லினை கண்காணித்தபோது ஜெனித் என்ற நபருடன் பழக்கம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, ஜெஸ்லினை பிரவீன் அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜெஸ்லின், பிரவீனிடம் தற்போது தான் ஜெனித் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை மறந்துவிடும்படியும் கூறியுள்ளார். இதைகேட்டு மனமுடைந்துபோன பிரவீன், தான் இதுவரை வாங்கிகொடுத்த பரிசு பொருட்கள் அனைத்தையும் திருப்பி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு ஜெஸ்லின் பரிசு பொருட்களை திரும்ப தருவதாகவும் கூறியுள்ளார்.
இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை பிரவீனிடம் பரிசுப்பொருட்களை தருவதாக கூறிய ஜெஸ்லின், வேர்கிளம்பி பகுதிக்கு அழைத்துள்ளார். புதிய காதலன் ஜெனித்துடன் வந்த ஜெஸ்லின், பிரவீனை கடுப்பு ஏத்தும்விதமாக பரிசு பொருட்களை தர முடியாது என மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து, தனது பரிசுப் பொருட்களை தருமாறு பிரவீன் வற்புறுத்தியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு கூலிப்படைகள் ஆட்கள் பிரவீனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பிரவீனை மீட்டு மருத்துவமனையில் மீட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரவீன் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, சிசிடிவி ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு ஜெஸ்லின், ஜெனித் மற்றும் தாக்குதல் நடத்திய இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.