நள்ளிரவில் கொடூர விபத்து! லாரி மோதி உயிரிழந்த காவலர் மற்றும் பிஞ்சு குழந்தை!
காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் பெண் காவலர் பிஞ்சு குழந்தையுடன் பலியான சம்பவம் சக காவலர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த உமா தேவி (வயது 26). இவர் நேற்றிரவு பணிமுடித்துவிட்டு தனது வீட்டிற்கு கணவர் ராஜா மற்றும் மகன் தக்ஷூத்-வுடன் பனப்பாக்கம் நோக்கி சென்னை- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று இரண்டு கார்களை மோதி முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில் காவலர் உமாதேவி மற்றும் அவரது இரண்டு வயது மகன் தக்ஷூத் இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுசெட்டி காவல்துறையினர் காயமடைந்த ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்தவர்களின் இரு பிரேதங்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டி காவல்துறையினர் லாரியை கைப்பற்றி தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர் .சாலை விபத்தில் பெண் காவலரும் அவரது பிஞ்சு குழந்தையும் பரிதாபமாக சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் பகுதியை சேர்ந்த உமா தேவி (வயது 26). இவர் நேற்றிரவு பணிமுடித்துவிட்டு தனது வீட்டிற்கு கணவர் ராஜா மற்றும் மகன் தக்ஷூத்-வுடன் பனப்பாக்கம் நோக்கி சென்னை- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று இரண்டு கார்களை மோதி முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில் காவலர் உமாதேவி மற்றும் அவரது இரண்டு வயது மகன் தக்ஷூத் இருவரும் நிகழ்விடத்திலேயே உயர் பிரிந்தது . இதுகுறித்து தற்போது எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். நள்ளிரவில் நடந்த விபத்து என்பதால் வாகனத்தை இயக்கி வந்தவர் மது போதையில் இருந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
பெண் காவலர் ஒருவர் நள்ளிரவில் விபத்தில் தனது பிஞ்சுக் கை குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்