மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரத்தில் வங்கி லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சி- எச்சரிக்கை மணி ஒலித்ததால் திருடர்கள் ஓட்டம்...!
படப்பை அருகே சவுத் இந்தியன் வங்கியில் ஜன்னல் கம்பிகளை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் சவுத் இந்தியன் வங்கியில் நேற்று இரவு லாக்கரை உடைக்க அடையாளம் தெரியாத கொள்ளை கும்பல் ஒன்று முயற்சி செய்துள்ளது. அப்போது திடீரென லாக்கரில் இருந்து எச்சரிக்கை அலாரம் அடித்ததுடன், இந்த எச்சரிக்கை வங்கி மேலாளருக்கும் சென்றுள்ளது. இதைதொடர்ந்து வங்கி மேலாளர் உடனடியாக மணிமங்கலம் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வங்கிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வங்கியின் உள்ளே இரண்டு ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அடைந்தனர்.
வங்கிக் கொள்ளை சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் கொள்ளை முயற்சி நடந்த சவுத் இந்தியன் வங்கியில் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில் வங்கியிலிருந்து பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். லாக்கரை உடைக்கும் பொழுது அலாரம் ஒலித்ததால், உள்ளே வந்த கொள்ளையர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார்.
மேலும் வங்கியில் இரவு காவலர் இல்லாததால் கொள்ளை முயற்சி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது, என்றும் உடனடியாக இரவு காவலரை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறையினரிடம் கேட்டபொழுது, பொதுவாக வங்கிகளில் நிச்சயம் இரவு காவலர்கள் நியமிக்க வேண்டும். ஆனால் இந்த வங்கியில் நீண்ட காலமாகவே இரவில் காவலர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே வங்கிக்கு உடனடியாக காவலரை நியமிக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே திருடன் நுழையும்போது, அலாரம் ஒலித்தது காரணத்தினால், உடனடியாக வங்கி மேலாளருக்கு தெரிந்துள்ளது. அவரும் உடனடியாக மணிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அச்சமயத்தில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து பணம் ஏதாவது கொள்ளை போய் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தினோம். விசாரணையில் பணம் கொள்ளை அடிக்க படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கொள்ளை அடிக்க முயற்சி நடந்த வங்கியில், சென்சார் கருவிகள் ஒலி எழுப்பிய காரணத்தினால், இந்த கொள்ளை சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் , நிதி நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட இடங்களில் நிச்சயம் இரவுக் காவலர்கள் இருப்பது அவசியம் என தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion