மேலும் அறிய
Advertisement
Kanchipuram Accident: காஞ்சிபுரத்தில் கொடூர விபத்து - கல்லூரி மாணவர், மாணவி பரிதாப மரணம்
Kanchipuram Accident Today: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விபத்தில் கல்லூரி மாணவர் மற்றும் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே குண்டுகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவரும், மாணவியும் கனரக லாரி மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து,பாலு செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள்
காஞ்சிபுரம் ( kanchipuram News ) : காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகள் மோனிஷா. இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மோனிஷா ராகுல் என்பவர் உடன் பள்ளி காலத்தில் இருந்து நெருங்கிய நண்பராக பழகி வந்துள்ளார். இருவரும் காஞ்சிபுரத்தில் வெவ்வேறு கல்லூரியில் படித்துள்ளனர். ஆனாலும் இவர்கள் இருவருடைய நட்பும் கல்லூரி காலத்திலும் தொடர்ந்து வந்துள்ளது.
நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து
இந்த நிலையில் இன்று, மாணவி மோனிஷா ராகுலுடன் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி - செவிலிமேடு புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த பொழுது குண்டு குளம் பகுதியில் முன்னே சென்ற கனரக லாரியை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே வந்த கனரக லாரி எதிர் பாராத விதமாக பயங்கரமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தின் மீது கனரக லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இருவருக்கும் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வெளியேறியது.
வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை
அதிகளவு ரத்தம் வெளியேறியதால் , விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கல்லூரி மாணவன் ராகுலும் பின்னால் அமர்ந்து வந்த மாணவி மோனிஷா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பாலுசெட்டி சத்திரம் போலீசார் உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய விபத்து
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் பயணித்த கல்லூரி மாணவி மற்றும் மாணவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion