Kallakurichi Illicit Liquor Death: கள்ளச்சாராயத்தில் மெத்தனால்! இவ்வளவு கொடியதா? உயிரை பறிப்பது இப்படித்தான்!
" கண் பார்வை மங்குவது, காது கேட்காமல் போவது, இறுதியில் மயக்கமடைந்து விடுவார்கள். இது அனைத்தும் ஒரு சில நிமிடங்களிலே நடந்து விடும் "
மெத்தனால் கலந்த விஷ சாராயம் விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெத்தனால் குடித்தால் உடலில் என்ன நடக்கும் ? ஏன் மெத்தனால் கலந்த சாராயம் ஆபத்தை விளைவிக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கள்ளச்சாராயம் விவகாரம் 35 பேர் பலி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால், 107 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிப்பு அடைந்த நபர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, அதே போன்று விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கள்ளச்சாராயம் குடித்ததில், 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 17 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 8 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அதிர்ச்சி தகவலும் வந்த வண்ணம் உள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என ஊடகங்களில் அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் இப்பொழுது நடந்து இருக்கும் சம்பவம் கள்ளக்குறிச்சி தலைநகரிலேயே நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகரில் கிடைத்த கள்ளச்சாராயம்
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் கிடைத்த கள்ளச்சாராயத்தால் இந்த உயிரிழப்பு நடைபெற்று இருப்பது, கள்ளச்சாராயத்தை கண்காணிப்பவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. கள்ளச்சாராயம் விற்றதாக கோவிந்தராஜ், தாமோதரன் ஆகிய இரண்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போக மேலும் 10 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மெத்தனால் என்ற அரக்கன் ?
தற்பொழுது உயிரிழப்பு ஏற்படுவதற்கு , கள்ளச்சாராயணத்தில் மெத்தனால் கலக்கப்பட்டது தான் காரணம் என கூறப்படுகிறது. மெத்தனாலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, கள்ளச்சாராயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் என்பது பொதுவாக அவற்றைக் காய்ச்சி குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள், இது போன்ற கலாச்சாராயத்தில் உயிரிழப்புகள் குறைவாக இருக்கும். மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் கலந்து விற்கப்படும் கள்ளச்சாராயம், சிறிய தப்பு நடந்தால் கூட அது விஷமாக மாறிவிடும் .
மெத்தனால் என்பது அரசு அனுமதி உடன் தொழிற்சாலைகளில் வேதிப்பொருட்கள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. மெத்தனால் கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேல் ஆல்கஹால் இருக்கும். அதை சரியாக டைலூட் ( நீர்த்துப் போகாமல் ) குடித்தால் உயிரை பறித்து விடும். மது வகைகளில் இதை பயன்படுத்த மாட்டார்கள். மது வகைகளில் பயன்படுத்தக் கூடியது "எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் " மட்டுமே பயன்படுத்தப்படும். குறைந்த விலையில் அதிக போதை தருவதற்காக, சாராய வியாபாரிகள் " மெத்தனால் " கலந்த சாராயத்தை விற்பது அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு செங்கல்பட்டு, விழுப்புரம் , மரக்காணம் ஆகிய பகுதிகளில் நடந்த உயிரிழப்பு கூட மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தில் தான் உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்றது.
மெத்தனால் குடித்தால் என்ன நடக்கும் ?
அதிக அளவு மெத்தனால் மனித உடலுக்கு நுழைந்தவுடன் முதலில் உணவு மண்டலத்தை பாதிக்கும். இதனால் வயிறு பிரட்டுவது, வயிறு வலி, வாந்தி, குடல் குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். தொடர்ந்து இது நரம்பு மண்டலத்தை சீர்குலைத்து விடும், இந்த சமயத்தில் தான் போதை ஏறியதாக குடிமகன்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள். நரம்பு மண்டலம் சீர்குலை ஆரம்பித்தவுடன் நுரை நுரையாக வாந்தி எடுப்பார்கள், அந்த வாந்தி நுரையீரலுக்கு செல்ல ஆரம்பிக்கும் என்பதால், சற்று என்று மூச்சு அடைக்கத் தொடங்கிவிடும்.
நரம்பு மண்டலம் வழியாக மூளை பாதிப்படைய துவங்கும், மூளை செல்கள் உடனடியாக அறிய துவங்கி விடும். அடுத்ததாக கண் பார்வை மங்குவது, காது கேட்காமல் போவது, இறுதியில் மயக்கமடைந்து விடுவார்கள். இது அனைத்தும் ஒரு சில நிமிடங்களிலே நடந்து விடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை உயிரிழந்த 35 பேருக்கும் இது போன்ற அறிகுறிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது