மேலும் அறிய

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடரும் வழிப்பறி - அச்சத்தில் பொதுமக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் உட்பட இரண்டு பெண்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பாண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் மனைவி செல்வி (வயது 65). இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக வந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்துவிட்டு செல்வி தனது அக்காள் கல்யாணி, உறவினர் அன்னபூரணி உட்பட 5 பேருடன் உளுந்தூர்பேட்டை செல்வதற்காக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்துக்கு வந்தார். தொடர்ந்து உளுந்தூர்பேட்டை செல்லும் பேருந்தில் செல்வி ஏறினார். அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 பெண்கள் செல்வியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். அதிர்ச்சியடைந்த செல்வி, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த 2 பெண்களையும் மடக்கிப்பிடித்து கள்ளக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூரை சேர்ந்தவர் துரை மகன் இளவரசன் (வயது 17). இவர் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் சங்கராபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி மெயின் ரோடு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி இளவரசனிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர்  நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மூரார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி தாலுகா, புக்கிரவாரியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அய்யப்பன் (வயது 23) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், இளவரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பன் மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்த போலீசார், செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனை செஞ்சி சீர்திருத்த பள்ளியில் சேர்க்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

வீட்டிலேயே கிளினிக்.. சிக்கிய கருமுட்டை விற்பனை கும்பல்! ஒரே பெண்ணிடம் 30-க்கும் மேற்பட்ட முறை!
வீட்டிலேயே கிளினிக்.. சிக்கிய கருமுட்டை விற்பனை கும்பல்! ஒரே பெண்ணிடம் 30-க்கும் மேற்பட்ட முறை!
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!
புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget