Crime: ’என்னை விட்டுடுங்க': கெஞ்சிய பெண்; தரதரவென இழுத்து.. சுற்றி வளைத்து கொடூரமாக தாக்கிய கும்பல்..ஷாக் வீடியோ!
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு கும்பல், இளம்பெண்ணின் முடியை பிடித்து தரதரவென இழுத்தது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர், இளம்பெண்ணின் முடியை பிடித்து தரதரவென இழுத்தது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ வைரல்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்வா மாவட்டத்தில் இருந்து வீடியோ வெளியானது. அதில், ஒரு வீட்டில் 5க்கும் மேற்பட்ட கும்பல் இருந்தது. அங்கிருந்த ஆண்கள் சிலர், வீட்டில் இருந்த பெண்ணை ஈவு இரக்கமின்றி, தரதரவென முடியை பிடித்து வீட்டிற்கு வெளியே இழுத்து வந்தனர். மேலும், அவருடன் வீட்டில் இருந்த இரண்டு நபர்களையும் வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து கடுமையாக அடித்துள்ளனர். அந்த பெண்ணின் குழந்தை அருகில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தது. அதையும் பொருட்படுத்தாமல், அந்த கொடூர கும்பல் அந்த பெண்ணின் முடியை பிடித்து இழுத்து அடித்துள்ளனர். மேலும், அங்கிருந்த இரண்டு நபர்களை அந்த கும்பல் காலால் எட்டி உதைத்து, முகத்தில் அடித்து கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து, அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசியும் துன்புறுத்தியுள்ளது போன்று வீடியோவில் உள்ளது.
This isn't #Manipur or #Rajsthan but #Billawar of #Kathua Distt in #JammuAndKashmir where a woman has been thrashed mercilessly by some people while her kids kept crying. The video surfaced on social media. An action is warranted against all those taking law into their hands… pic.twitter.com/ddwHTttyZ9
— Jammu Tweeter (@jammu_tweeter) September 4, 2023
என்ன காரணம்?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் தோவல் கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வருவதாக தெரிகிறது. இந்த பெண் கிராமத்திற்கு வெளியே இருந்து குறிப்பிட்ட நபர்களை அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனை உள்ளூர் வாசிகள் வேறு கிராமத்தில் இருப்பவர்கள் இங்கு அழைத்து வரக்கூடாது என்று கூறியிருந்தனர். இருப்பினும், அந்த பெண் சம்பவத்தன்று இரண்டு ஆண்களை தனது வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு:
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கடந்த திங்கள் கிழமை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். காகு ராம், பல்லு ராம், ஹேப்பி, பான்டி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க





















