Crime: ஃபிரிட்ஜுக்குள் துண்டு துண்டாக ஆபாச நடிகையின் உடல்! உடலுறவுக்குப் பின் நடந்த கொடூர கொலை!
பிரபல ஆபாச நடிகை ஒருவரை அவருடைய காதலர் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஆபாச திரைப்பட நடிகை ஒருவரை அவருடைய காதலர் அடித்து கொலை செய்து பல துண்டுகளை உடலை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பல அதிர்ச்சிகர தகவல்களும் வெளியாகியுள்ளன.
அதன்படி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் கரோல் மால்டசி(26). இவர் ஒரு வாசனை திரவம் விற்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்துள்ளது. எனினும் கருத்து வேறுபாடு காரணமாக இவர் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தச் சூழலில் கொரோனா லாக்டவுன் காலத்தில் இவருடைய வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் ஒன்லி ஃபேன்ஸ் என்ற ஆபாச வலைதளத்தில் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அதன்மூலம் வரும் வருமானத்தை பயன்படுத்தி கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு வீட்டிற்கு அருகே இருக்கும் உணவு ஃபளாக்கர் டேவிட் ஃபாண்டானோ(43) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் உடலுறவு செய்யும் காட்சிகளை வீடியோவாக எடுத்து அந்த ஆன்லைன் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அப்படி ஒரு வீடியோ எடுத்து முடித்த பிறகு ஒருநாள் மால்டசியை ஃபாண்டானோ கொலை செய்துள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் அவரே காவல்நிலையத்திற்கு சென்று மால்டசியை காணவில்லை என்ற புகாரை அளித்துள்ளார்.
இவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த சமயத்தில் குப்பை கழிவுகளில் பெண் ஒருவரின் கை துண்டு துண்டாக கிடந்த தகவல் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அதைவைத்து விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் மால்டசி என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் டேவிட் ஃபாண்டானோவை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து ஃபாண்டானோ,”கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி நானும் மால்டசியும் ஒரு உடலுறவு செய்யும் வீடியோ எடுத்தோம். அதன்பின்பு மால்டசியை நிர்வாணமாக கம்பி ஒன்றில் கட்டி வைத்தேன். அவருடைய முகத்தை பாலீதின் பை வைத்து மூடி சுத்தியால் அவருடைய தலையில் பல முறை அடித்தேன். மால்டசி இரத்த வெள்ளத்தில் மிதந்தார். அப்போது அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இந்த அனைத்தும் என்னுடைய மொபைல் போனில் ரெக்கார்டு செய்யப்பட்டிருந்தது. அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு ஃபிரிட்ஜில் வைத்திருந்தேன். சில நாட்களுக்கு பிறகு அந்த துண்டுகளை குப்பை கழிவில் கொட்டிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த வாக்குமூலம் காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்