மேலும் அறிய

"காதுக்குள் யாரோ அழைக்கிறாங்க.." சென்னையில் ஐடி ஊழியர் விபரீத முடிவு- சிக்கிய ஷாக் கடிதம்

"காதுக்குள் ஏதோ ஒலி கேட்பதாக" கூறி ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு ஐடி ஊழியர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐடி ஊழியர் விபரீத முடிவு

சென்னை மேற்கு முகப்பேர் திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர் ரோஷன் நாராயணன் (24) அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இவரது பெற்றோர் மற்றும் சகோதரர் அவரது மனைவி ஆகியோர் திருப்பதி கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளனர். அப்போது வீட்டில் ரோஷன் நாராயணன் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து திருப்பதி சென்றவர்கள் இன்று அதிகாலையில் அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டிப் பார்த்தும் திறக்கப்படவில்லை. இதையடுத்து பெற்றோர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது ரோஷன் நாராயணன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறி துடித்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். 

சிக்கிய ஐடி ஊழியரின் கடிதம்

வீட்டிற்குள் சென்று ரோஷன் நாராயணன் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளனர். அப்போது அங்கு வந்து செவிலியர்கள் ரோஷன் நாராயணன் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிய வந்தது. இதனையடுத்து ரோஷன் நாராயணன் தற்கொலை தொடர்பாக தகவல் அறிந்து நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உடலைகைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் ரோஷன் தங்கி இருந்த அறையை சோதனை செய்தனர். தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

"தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஓர் ஒலி"

அதில், "தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஓர் ஒலி தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பதாகவும், இதனால் மன உளைச்சல் அதிகரித்துள்ளதாக எழுதியுள்ளார். மேலும் சகோதரரிடம் ஏற்கனவே சண்டை போட்டதற்கு  மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும்,  தாய்-  தந்தையர் தன்னை மன்னித்து விடுங்கள் என்று ரோஷன் நாராயணன் கடிதம் எழுதி வைத்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு தற்கொலைக்கான காரணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget