மேலும் அறிய
Advertisement
செங்கல்பட்டு: பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை? தனியார் குளிர்பான நிறுவன அதிகாரி மீது புகார்!
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை தொர்பாக தனியார் தொழிற்சாலை எச்.ஆர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி இவரது மகள் சைனியா. இவர் மாமண்டூர் பகுதியில் உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலையில், கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சைனியா வழக்கம்போல மாமண்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். சைனியா வேலைக்கு சென்ற சென்ற பின்னர், அவரது பெற்றோருக்கு தொழிற்சாலையிலிருந்து செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய தொழிற்சாலை நிர்வாகத்தினர் சைனியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளதாகவும், இதனால் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சைனியாவை கண்டு பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர். சைனியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் பெண்ணின் தந்தை வேளாங்கண்ணி, தனியார் குளிர்பான கம்பெனியில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் ஒருவர் தான், தனது மகள் சைனியாவின் தற்கொலைக்கு காரணம் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என நேற்று காலை படாளம் போலீசில் புகார் செய்தார். அவருடன் சென்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கம்பெனியின் நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல்துறை அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் உறவினர்களிடையே உறுதியளித்தனர். இதனையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து இளம் பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், கம்பெனியின் எச்.ஆர் பிரிவில் பணிபுரியும் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் என்ன பிரச்சனைகளை சந்தித்தாலும் தற்கொலை தீர்வு இல்லை என்பதே மருத்துவர்களின் கருத்து. எக்காரணம் கொண்டும் மனம் அழுத்தம் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வரக்கூடாது. அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion