Crime: மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்! மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!
2019ல் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனுக்கு ஹைதரபாத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
சமீபகாலமாக இந்தியாவில் குடும்பங்களுக்குள்நடக்கும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கணவன் மனைவிக்குள் நடக்கும் சிறு, சிறு சண்டைகள் கொலைகளில் சென்று முடிவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு மனைவியை கொடூரமாக கொன்ற கார் ஓட்டுநருக்கு தற்போது ஹைதரபாத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கார் கேட்ட கணவன்:
ஹைதரபாத்தில் வசித்து வருபவர் இமாம் உல் ஹக். இவர் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். சிறு, சிறு காரணங்களுக்காக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி இமாம் உல் ஹக் புதியதாக கார் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது மனைவியிடம் 30 ஆயிரம் பணம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவரது மனைவி பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கொடூர கொலை:
அப்போது, கோபத்தின் உச்சிக்கே சென்ற இமாம் உல் ஹக் அருகே இருந்த கத்தரிக்கோலை எடுத்து அவரது மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும், அங்கே இருந்த சுத்தியல் ஒன்றை எடுத்து அவரது மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். மேலும், அங்கே இருந்த ஆணியை எடுத்து அவரது மனைவியின் பிறப்புறுப்பில் செலுத்தி அவரை கொடுமைப்படுத்தியுள்ளார்.
இந்த கொடூர கொடுமையால் அவரது மனைவி வலி தாங்க முடியாமல் அலறி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இமாம் உல் ஹக் அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர், தகவலறிந்த போலீசார் இமாம் உல் ஹக்கின் மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த இமாம் உல் ஹக்கையும் கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
மரண தண்டனை:
இந்த வழக்கின் விசாரணை கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், அவருக்கு ஹைதரபாத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மேலும் படிக்க: Crime: வேறு பெண்ணுடன் தொடர்பு; தட்டிக்கேட்ட மனைவியை கொன்ற கணவன்.. கோவாவில் பயங்கரம்..
மேலும் படிக்க: ஏற்கனவே ஒரு 10, இப்ப ஒரு 10 ஆக மொத்தம் 20 ரூபாயா....? - மயிலாடுதுறையில் கொந்தளித்த குடிமகன்கள்