மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பிளம்பர் - ஆத்திரமடைந்த கணவர் செய்த செயல்
சென்னையில் நிகழ்ந்த பல்வேறு குற்ற சம்பவங்களை கீழே காணலாம்.

மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பிளம்பர் - மது வாங்கி கொடுத்து கொலை செய்த கணவர்
சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அன்பு கணபதி ( வயது 28 ) பிளம்பர். இவருக்கும் , அதே பகுதியை சேர்ந்த ராஜ துரை ( வயது 30 ) என்ற ஆட்டோ ஓட்டுநரின் மனைவி மதுவுக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. நேற்று முன்தினம், இரு தரப்பு குடும்பத்தினர் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதில் இனிமேல் மதுவுடன் பேசக் கூடாது என்று அன்பு கணபதியை கண்டித்து அனுப்பியுள்ளனர்.
அனைவரும் கலைந்து சென்ற நிலையில் , ராஜதுரை வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவி மதுவுடன் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மது வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் அன்பு கணபதி தான் அவரை தீர்த் துக் கட்டவேண்டும் என ராஜதுரை திட்டமிட்டுள்ளார். நடந்த அனைத்தையும் மறந்து விட்டேன் , மது அருந்தலாம் என அன்பு கணபதியை ராஜதுரை அன்பாக பேசி அழைத்து சென்றுள்ளார்.
பெருங்குடி ரயில் நிலையம் அருகே , இருவரும் அமர்ந்து மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் , கள்ளத் தொடர்பு தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜ துரை , மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அன்புகணபதியின் கழுத்து , மார்பு பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு தப்பியுள்ளார்.
பலத்த காயத்துடன் ஓடிய அன்பு கணபதியை , உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது , வழியிலேயே அவர் உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் , உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதே காவல் நிலையத்தில் சரண் அடைந்த ராஜதுரையிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திடீரென வலிப்பு ஏற்பட்டு , பெரும் விபத்தை ஏற்படுத்தி அரசு மருத்துவர் கைது
சென்னை திருவேற்காடு ஈஸ்வரன் நகர் ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் அறிவரசன் ( வயது 41 ) இவரது மனைவி சரண்யா ( வயது 36 ) கடந்த 28 - ம் தேதி , அறிவரசன் டி.வி. எஸ்., ஸ்கூட்டியில் மனைவியுடன் , ஆவடி - பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆவடி, வசந்தம் நகர் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த கார் , ஸ்கூட்டி மற்றும் சாலை யோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அறிவரசன், சரண்யா தம்பதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த ஆவடி பல்லவன் நகரைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாரி மார்க்ஸ் ( வயது 46 ) காயமடைந்தார். அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணையில், சோராஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் இவர், காரை வேகமாக ஓட்டிச் சென்ற போது திடீரென வலிப்பு ஏற்பட்டு விபத்து நடந்தது தெரிய வந்தது. பாரி மார்க்ஸ் சிகிச்சை முடிந்து, தற்போது நலமாக உள்ளார். இதையடுத்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அதிவேகமாக கார் ஓட்டுதல், அலட்சியமாக வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





















