மார்பு.. அந்தரங்கப்பகுதி.. 16 இடங்களில் சூடு வைத்த கொடூர கணவன் - தப்பித்து ஓடிவந்த மனைவி..!
தருமபுரியில் மனைவியை கட்டிபோட்டு உடல் முழுவதும் பல இடங்களில் கணவன் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த எம்.தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு கலைவாணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சீராக சென்றுகொண்டிருந்த குடும்பத்தில் பாண்டியன் சொன்ன ஒரு பெரிய பொய் புயலைக் கிளப்பியுள்ளது. தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து மனைவியை இறந்ததை வெளியே சொல்லாமல் கலைவாணியை திருமணம் செய்துள்ளார் பாண்டியன். இந்த விவரம் கலைவாணிக்கு தெரியவர இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்கு வருவதையே பாண்டியன் தவிர்த்துள்ளார். வீட்டுக்கே வராமல் என்ன செய்கிறார் என்று கண்காணித்ததில் பாண்டியன், மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
திருமணமான அந்த பெண்ணுடன் வசித்து வந்த பாண்டியன் கலைவாணி வசிக்கும் வீட்டுக்கு வருவதே இல்லை. இதுமட்டுமின்றி தன்னுடைய காதலியின் பேச்சைக்கேட்டுக்கொண்டு கலைவாணி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. அவர்களை கலைவாணியின் தந்தை வீட்டுக்கு அடித்து விரட்டியுள்ளார் பாண்டியன். பின்னர் பஞ்சாயத்து பேசி மீண்டும் கலைவாணி கணவனோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வீட்டுக்கு வந்த கலைவாணியை பாண்டியனும், அவரது பெற்றோரும் கொடுமைப் படுத்தத் தொடங்கியுள்ளனர். கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். மயங்கிய கலைவாணி கை, கால்களை கட்டி வாயில் துணி வைத்து அடைத்து பழுக்க காய்ச்சிய இரும்புக்கம்பியை வைத்து உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார். கை, கால்கள், மார்பு, அந்தரப்பகுதி என உடல் முழுவதும் 16 இடங்களில் சூடு வைத்ததும் இல்லாமல் வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளனர்.
வலியால் துடித்த கலைவாணி கணவரும், அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கிருந்து தப்பித்து தாய் வீட்டுக்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். இதனை அடுத்து பென்னாகரம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார் கலைவாணி. காயங்கள் ஆறிய நிலையில் தனக்கு நியாயம் வேண்டி பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தை நாடியுள்ளனர் கலைவாணி குடும்பத்தினர்.ஆனால் கணவர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்த காவல்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவகத்திற்கு குடும்பத்துடன் வந்த கலைவாணி, கணவர் பாண்டியன், அவரது குடும்பத்தினர், பாண்டியனின் புதுக்காதலி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளார். தன் மீது சூடு வைத்த புகைப்பட ஆதாரங்களையும் கலைவாணி அளித்துள்ளார்.
தன்னையும், தன் குழந்தைகளையும் கொடுமைப்படுத்திய கணவர் அவரது காதலி மற்றும் கணவரின் குடும்பத்தினர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலைவாணியின் குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது
கோவையில் யூ ட்யூப் பார்த்து கற்றுக்கொண்டு, குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர் கைது!