(Source: ECI/ABP News/ABP Majha)
Crime | ஒசூர் : கொள்ளை புகார் பரபரப்பு.. தீவிர விசாரணையில் சிக்கிய இரிடியம் மோசடி தம்பதி.. 5 பேர் கைது
இரிடியம் மோசடியில் ஈடுபட்ட தம்பதியும் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வாஸ்துசாலா நகரை சேர்ந்தவர்கள் ஸ்ரீதேவி வயது (35) , சிவசங்கர் வயது (40) ஆகிய இவர்கள் தங்களது வீட்டிற்கு நான்கு சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் வீட்டில் இருந்த ரூபாய் 1லட்சம், 5½ பவுன் தங்க நகைகளை மற்றும் செல்போன்களை திருடி சென்றதாக கூறி சில நாட்களுக்கு முன்பு ஓசூர் அட்கோ காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர். அதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரண் தேஜஸ்வி நேரில் சென்று விசாரணை நடத்தி துணை ஆய்வாளர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைத்தார். தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஓசூரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தம்பதி கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரிந்தது. இதையடுத்து தம்பதி, சிக்கிய 3 நபர்கள் உள்ளிட்ட 5 நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடிக்கிடும் தகவல்கள் கிடைத்தன.ஓசூர் வாஸ்துசாலா நகரை சேர்ந்த ஸ்ரீதேவி-சிவசங்கர் தம்பதி தங்களது வீட்டில் 1 கோடி ரூபாய் மதிப்புடைய இரிடியம் இருப்பதாக கூறியும். அதை விற்பனை செய்து தர தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஸ்ரீதேவி தம்பதியிடம் இருந்த இரிடியத்தை பறிக்க திட்டமிட்ட பன்னீர் செல்வம் அடியாட்களை அனுப்பி ஸ்ரீதேவி தம்பதியரை மிரட்டி அவர்களிடம் உள்ள இரிடியரத்தை பிரித்துள்ளனர். இரிடியம் பரிபோனதால் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தால் தானும் மாட்டிக்கொள்வோம் என பயந்து அதனை மறைத்து ஸ்ரீதேவி தம்பதியினர் நகை மற்றும் பணம் திருட்டு போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி யதில் இரிடியம் திருடிச்சென்ற தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஜெகசமூத்திரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் வயது (39)முயன்றதும் தெரியவந்தது.
அரூரை சேர்ந்த வல்லரசு (23), இளையபிரபு (39), ஆகியோர் பன்னீர்செல்வம் மூலம், ஸ்ரீதேவி தம்பதியிடம் இரிடியம் என வைத்திருந்த செம்புக்குடத்தை பறித்து சென்றதும், இதனை நகை, பணம் திருடியதாக திசை திருப்பி தம்பதி புகார் அளித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தம்பதி உள்ளிட்ட 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செம்புக்குடத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய அரூர் பகுதியை சேர்ந்த விஜயபிரபாகரன், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சந்துரு ஆகிய 2 நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.