மேலும் அறிய

கும்மிடிப்பூண்டி ATM கொள்ளை: கேஸ் கட்டிங், கருப்பு பெயிண்ட்! வடமாநில கும்பல் கைவரிசையா?

கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை.

கும்மிடிப்பூண்டியில் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டிங் மெஷின் உதவியோடு உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவை கருப்பு பெயிண்டால் மறைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.அருகில் உள்ள மற்றொரு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியும் நடந்துள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதே பாணியில் ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பைபாஸ் சாலையில் தனியார் வங்கியின் ஏடிஎம் உடைக்கப்பட்டதாக அருகில் உள்ள கடைக்காரர் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.அதன் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்ததில் ஏடிஎம் இயந்திரம் கேஸ் கட்டிங் மெஷின் கொண்டு உடைக்கப்பட்டதும், அந்த அறையில் இருந்த சிசிடிவி கேமரா கருப்பு பெயிண்ட் அடித்து மறைக்கப்பட்டதும் தெரிய வந்தது.

இதனையடுத்து வங்கி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பிறகு அங்கு வந்து விசாரணை நடத்தியதில் ஏடிஎம்மில் வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அருகில் இருந்த மற்றொரு ஏடிஎம் இயந்திரமும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

கொள்ளை அடித்தவர்கள் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் உடைக்கப்பட்டு ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.காஞ்சிபுரம் போலீசார் தனிப்படை அமைத்து அசாம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதே பாணியில் கேஸ் வெல்டிங் வைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளதால் வடமாநில கொள்ளையர்களின் கைவரிசை இருக்கலாம் என கருதும் கும்மிடிப்பூண்டி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget