கணவனுக்கு தெரியாமல் காதலனுடன் ஜோடி சேர இளம்பெண் செய்த காரியம்! அநியாயமாக முதியவர் பலி!
தனது காதலுடன் ஜோடி சேர முதியவர் ஒருவரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தனது காதலுடன் ஜோடி சேர முதியவர் ஒருவரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் ஜெகோத்ரா கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் கெங்கா பீமா அஹிர். இவர் நேற்று முன் தினம் தனது மகன் அழுகை சத்தம் கேட்டு எழுந்துள்ளார். அப்போது தனது மனைவி கீதாவை கூப்பிட்டார். ஆனால் பதில் இல்லாததால் பதற்றமடைந்த சுரேஷ் மனைவியை அக்கம் பக்கம் தேடினார். அப்போது வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் பாதியளவு எரிந்த நிலையில் கிடந்தது. இறந்தவர் ஆரஞ்சு மற்றும் ஊதா காக்ரா – சோளி உடையணிந்து வெள்ளி கொலுசு அணிந்திருந்தார்.
அந்த ஆடைகள் மற்றும் நகைகள் சுரேஷின் மனைவி கீதாவுடையது என்பது தெரியவந்தது. இதைப்பார்த்து சுரேஷ் அதிர்ச்சியடைந்தார்.
கீதா இறந்ததாக எண்ணிய சுரேஷ் அந்த உடலை வீட்டிற்கு தூக்கிச் சென்றார். ஆனால் அது ஆணின் உடல் என்பது பின்னர் தெரியவந்தது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் நேற்று காலையில் பலன்பூர் ரயில் நிலையத்தில் கீதாவும் அவரது காதலன் பாரத் அகிர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் அதற்காக நாடகமாடி 56 வயதான முதியவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.






















