Sirkazhi: மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பன்... கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்..!
சீர்காழியில் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சித்த நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை சீர்காழி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல செங்கமேடு கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி என்பவரின் மகன் 28 வயதான சசிகுமார். ஓட்டுனரான இவரும், சிதம்பரம் துணிசிற மேடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மகன் 31 வயதான மணிமாறனும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கம்பி பிட்டர் வேலைக்காக மணிமாறன் தனது மனைவியுடன் சீர்காழி பிடாரி கீழ வீதி பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். அப்பொழுது நண்பனை சந்திப்பதற்காக அவ்வப்போது மணிமாறன் வீட்டிற்கு சசிகுமார் வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று சசிகுமார் மர்மமான முறையில் மணிமாறன் வீட்டிலேயே உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் சசிகுமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மணிமாறன் உயிரிழந்ததது தொடர்பாக தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சசிகுமார் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
Kapil Dev 175 Record: மறக்க முடியாத அந்த '175'.. ருத்ரதாண்டவம் ஆடிய கபில்தேவ்..! வரலாற்றில் இன்று..!
இதனை அடுத்து அவரது நண்பரான மணிமாறனை காவல்துறையினர் விசாரித்த போது தனது மனைவியிடம் சசிகுமார் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், இதுகுறித்து மனைவி தன்னிடம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மணிமாறன் தனது வீட்டில் வைத்தே நண்பரான சசிகுமாரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து மணிமாறனை கைது செய்து சீர்காழி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நண்பன் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனை கொலை செய்த சம்பவம் சீர்காழி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற