சுப்பி எடுக்க வந்த இருளர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வனக்காவலர் கைது!
தன் மீது நடந்த பாலியல் அத்துமீறலை தன் தங்கை உதவியோடு வீடியோ எடுத்த இளம் பெண்ணின் செயலால், வனக்காவலர் கையும் களவுமாக பிடிபட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் பகுதியில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.பகுதி ரகுநாத சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரிகா வயது (26) இவர் இருளர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று சகோதரி உள்ளிட்டோருடன் விறகு வெட்டுவதற்காக வாழ்குடை கிராம காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த ஆரணி சரக வனக்காவலர் செல்வராஜ் என்பவர் அங்கு சென்று நீங்கள் யார் என்று கேட்டுள்ளார் அப்போது இருவரும் விறகு உடைப்பதற்காக வந்தோம் என்று கூறியுள்ளனர். அப்போது வனக் காவலர், உன்னிடம் பேசவேண்டும் என்று கூறி சந்திரிகாவை தனியாக அழைத்துள்ளார். தனியாக வந்த அவரிடம், ‛நீ ரொம்ப அழகா இருக்க... உன்னுடைய இரண்டு கண்கள் ரொம்ப அழகாக இருக்கிறது; உன்னைப் பார்த்த உடன் எனக்கு காதல் செய்ய தூண்டுகின்றது....’ என்று தவறாக பேசியுள்ளார். ‛உன்னுடைய தொலைபேசிஎண் கொடுத்தால் நாம் தினசரி பேசிக்கொள்ளாம் என்று கூறிய அவர், பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து இளம்பெண் சந்திரிகா, அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு வீட்டிற்கு அழுதுக்கொண்டே வந்துள்ளார். பின்னர் காட்டுப்பகுதியில் ஏற்ப்பட்ட சம்பவத்தை பெற்றோர்களிடமும் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து சந்திரிகா பெரணமல்லூர் காவல் நிலையத்தில் வனக்காவலர் செல்வராஜ் குறித்து காவல் ஆய்வாளர் நந்தினி தேவியிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வனக்காவலர் செல்வராஜை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தன் மீதான தவறை செல்வராஜ் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்த பழங்குடியினர் பெண்ணை வழிமறித்து தடுத்து நிறுத்துதல், பாலியல் குற்றம் மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் வனகாவலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் சந்திரிகாவை வனக்காவலர் செல்வராஜ் பாலியலுக்கு அழைத்த போது வனகாவலருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தது சந்திரிக்காவுக்கு இந்த விசாரணைக்கு பெரும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிட தக்கது.
இன்றைய முக்கியச் செய்திகள்...
‛ஃபுல் பிராந்தி முதல் ஜில் வாட்டர் வரை...’ சோஷியல் மீடியாவை தள்ளாட வைக்கும் தீபாவளி பண்டு!https://t.co/ZjLJM9euTA#Chennai #Liquor #Offer
— ABP Nadu (@abpnadu) October 27, 2021
‛ஆளுநர் தலையிடுவதில் எந்த தவறும் இல்லை...’ - பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேட்டி!https://t.co/yBYHOcUTLM#vanathisrinivasan #BJP #TamilNadu
— ABP Nadu (@abpnadu) October 27, 2021
சுகாதார துணை இயக்குனர் வங்கி லாக்கரில் கட்டுக்கட்டாக பணம்... 160 சவரன் நகை ஆகியவை பறிமுதல்!https://t.co/pmeOl0JOc4#Jewellery #Crime #TamilNadu
— ABP Nadu (@abpnadu) October 27, 2021
வீட்டை எழுதி தராத கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி கைது: கண்ணில் மிளகாய் பொடி தூவி ‛டார்ச்சர்’ செய்தது அம்பலம்!https://t.co/yBlh2duVOh#Vilathikulam #DomesticViolence #News
— ABP Nadu (@abpnadu) October 27, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்