மேலும் அறிய

பள்ளி மாணவர்களுக்கு, பாலியல் வன்தொல்லை அளித்த விடுதி துணை காப்பாளர் போக்சோவில் கைது

சேத்துப்பட்டு அருகே அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு தற்பாலினச் சேர்க்கைக்கு வற்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விடுதி துணை காப்பாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த உள்ள பத்தியாவரம் கிராமத்தில் உள்ள சூசை நகர் பகுதியில் உள்ளது, புனித வளனார் ஆண்கள் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மேல்நிலைப்பள்ளியில் 1976-ஆம் ஆண்டிலிருந்து தற்பொழுது வரையில் 2022-ஆம் ஆண்டு தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியின் அருகாமையில் இந்த புனித வளனார் ஆண்கள் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கான விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் வெளியூரிலிருந்து வந்து 113 மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு, பாலியல் வன்தொல்லை அளித்த விடுதி துணை காப்பாளர் போக்சோவில் கைது

இந்நிலையில் இன்று விடுதியில் தங்கி பயின்று வருபவர்கள் 9,10,11,12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் திருவண்ணாமலை சமூக நலத்துறைக்கு இணையதளம் மூலம் புகார் ஒன்று அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விடுதி துணை காப்பாளர் துரைப்பாண்டி வயது (35) என்பவர் இங்கு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை, தன்னுடன் தற்பாலின சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தியதாகவும் மேலும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாகவும் இணையதளத்தில் 8 மாணவர்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட 8 மாணவர்களையும் திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு மதியம் 12 மணிக்கு மேல் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

முதல் மனைவிக்கு குளத்துக்கு அருகே குழி! கொன்று புதைத்துவிட்டு குடிபோதையில் உளறிய ராணுவ வீரர்!

பள்ளி மாணவர்களுக்கு, பாலியல் வன்தொல்லை அளித்த விடுதி துணை காப்பாளர் போக்சோவில் கைது

இந்த விசாரணையின் முடிவில் துணை விடுதி காப்பாளர் துரை பாண்டியன் மாணவர்களை தற்பாலின சேர்க்கையில் ஈடுபட கட்டாய படுத்தியதாகவும். மேலும் அவர்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. இதன் பின்னர் விடுதி துணைக் காப்பாளர் மீது சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் காவல்துறையினர் விடுதி துணை காப்பாளர் துறை பாண்டியனை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.சேத்துப்பட்டு அருகே பத்தியாவரம் கிராமத்தில் இதுபோன்று மாணவர்களை தற்பாலின சேர்க்கைக்கு வற்புறுத்தி பாலியல் தொந்தரவு செய்த விடுதி துணை காப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதே பள்ளியின் விடுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று விடுதி காப்பாளர் ஒருவர் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கைதானது குறிப்பிடத்தக்கது .

Video: சேலத்தில் குடிபோதையில் வண்டி ஓட்டியதாக காவல்துறையினர் அபராதம்; இளைஞர் தீக்குளிப்பு

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget