மேலும் அறிய

Germany : 50 கத்திக் குத்துகள்.. கொலை செய்யப்பட்ட கட்திஜா; அதிர்ச்சி அளிக்கும் பின்னணி..!

Germany : ஜெர்மனியில் நடந்துள்ள ஒரு கொலை அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது.

Germany :  23 வயதான ஜெர்மன் பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் தன்னைப் போலவே தோற்றமளிக்க கூடிய பெண் ஒருவரை கொலை செய்து,  தனது சொந்த மரணத்தை போலியான முறையில் நிகழ்த்த முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக டெலிகிராப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த கொலை வழக்கு மிருகத்தனமான மற்றும் விநோதமான வழக்காகவும், "டாப்பல்கேஞ்சர் கொலை" என்றும் அழைக்கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள  ஷஹ்ராபன் கே என்ற 24 வயதான  பெண் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கை உருவாக்கி, அவரைப் போன்ற பெண்களை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.   தனது போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கட்டமான தேடுதலுக்குப்  பிறகு குற்றம் சாட்டப்பட்ட பெண், தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து 100 மைல்களுக்கு அப்பால் வசித்த அல்ஜீரியாவைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய கதிட்ஜா ஓ என்ற ஒரு அழகுசாதன பொருட்களை தயாரிப்பாளரைக் கண்டுபிடித்துள்ளார். இரு பெண்களும் நீண்ட கருமையான கூந்தலும் ஒரே மாதிரியான நிறமும் கொண்டிருந்தனர். 
போலிஸாரின் கூற்றுப்படி, ஷஹ்ரபான் கே மற்றும் அவரது காதலன் ஷேகிர் கே, 24, கதிஜாவை அணுகி அழகு சாதனப் பொருட்களை வழங்கி, அழைத்துச் செல்லச் சென்றுள்ளனர். அதன் பின்னர், திரும்பிச் செல்லும்போது, ​​அவர்கள் ஒரு காட்டில் நிறுத்தி, பாதிக்கப்பட்டவரை 50 முறைக்கு மேல் கத்தியால் சரமாரியாக குத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஷஹ்ரபான் கே தனது முன்னாள் கணவரை சந்திக்கப் போவதாக அவரிடம் கூறியிருந்தார். ஷாஹ்ராபன் திரும்பி வராததால், அவளது பெற்றோர் இங்கோல்ஸ்டாட்டில் அவளைத் தேடிச் சென்று டானூப் அருகே அவளது மெர்சிடஸ் காரைக் கண்டனர்.

காரின் பின் இருக்கையில், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட கருமையான இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, அது அவர்களின் மகள் என்று அவர்கள் கூறியதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

போலிஸாரின் கூற்றுப்படி, சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே பல கத்திகள் காணப்பட்டதாகவும், ஷேகிர் கேயின் குடியிருப்பில் இருந்து வெகு தொலைவில் கார் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரேதப் பரிசோதனை மற்றும் டிஎன்ஏ சோதனைகளுக்குப் பிறகு, கொல்லப்பட்டது உண்மையில் கதிட்ஜா ஓ என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஷாரபான் கே மற்றும் சேகிர் கே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

காரின் உரிமையாளருக்கும் இறந்தவர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையால் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கோல்ஸ்டாட் வழக்கறிஞரான வெரோனிகா க்ரீசர் பில்ட் செய்தித்தாளிடம் கூறுகையில், "குற்றம்சாட்டப்பட்டவர் தன்னைப் போலவே தோற்றமளிக்கும் பல பெண்களை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது”.

"குற்றவாளி தனது குடும்பத்துடனான உள் தகராறுகளால் அவரது சொந்த மரணத்தினைப் போன்று ஒன்றை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருக்க விரும்பியுள்ளார்." இதுதான் கொலைக்கான அடிப்படைக் காரணம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- அழகு சாதனை பொருளை தந்த பின்னர், ​​காரில் திரும்பி வரும்போது ஏற்கனவே திட்டமிட்டபடி வாகனத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு, உடலில் 50க்கும் மேற்பட்ட கத்திக்குத்துகளுடன் மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதியில் கொல்லப்பட்டார் கதிஜா. பாதிக்கப்பட்டவர் 50க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்களுடன் கொல்லப்பட்டார் மற்றும் அவரது முகத்தில் மோசமான மற்றும் கொடூரமான காயம் ஏற்பட்டுள்ளது எனவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
Embed widget