மேலும் அறிய

நெல்லையில் திமுக பிரமுகர் தாயின் கண்முன்னே சரமாரியாக வெட்டிக்கொலை.. விசாரணை தீவிரம்

”தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா ? அல்லது தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் காரணங்களுக்காக கொலை நடந்ததா என போலிசார் தீவிர விசாரணை”

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜார் அருகே தெற்கு உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திமுக பொன்னுதாஸ் என்ற அபே மணி, இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும் சுபேசன் மற்றும் சரண்யா என 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் பாளையில் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார்.  38 வது வார்டு செயலாளராக இருந்து வருகிறார்,  அபே மணி என்று அழைக்ககூடிய பொன்னுதாஸ் ( வயது 38 ).  வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அபே மணி தனது தாயார் பேச்சியம்மாளை கவுன்சிலராக போட்டியிட வைக்க கட்சியில் விருப்பமனு பெற்றுள்ளார்.  இது தொடர்பான திமுக கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில் அதற்கான நேர்காணலிலும் கலந்து கொள்ள இருந்தார். 

நெல்லையில் திமுக பிரமுகர் தாயின் கண்முன்னே சரமாரியாக வெட்டிக்கொலை.. விசாரணை தீவிரம்

இந்த நிலையில் அபே மணி நேற்று இரவில் தனது இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வீடு திரும்பும் போது வீட்டின் வாசல் வரை பின்னால் ஆம்னி கார் அவர் பைக் மீது மோதி உள்ளது. அதில் அவர் நிலை தடுமாறி கீழே விழ காரில் இருந்து வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் விட்டு தப்பியோடினர்.. பொன்னுதாஸ் என்ற அபே மணி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே தாய் கண் முன்னே உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த பொன்னு தாஸின் தாயார் பேச்சியம்மாள் நடந்த சம்பவத்தை பார்த்து கூச்சலிட்டுள்ளார். இரவு 11 மணி என்பதால் தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லை. ஆனால் கூச்சல் சத்தம் கேட்டு மக்கள் திரண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து பொன்னுதாஸின் உடலை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர்.

நெல்லையில் திமுக பிரமுகர் தாயின் கண்முன்னே சரமாரியாக வெட்டிக்கொலை.. விசாரணை தீவிரம்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை ஆணையாளர் துரைகுமார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டார்.மேலும் தடவியல் நிபுணர்களும் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார். 

நெல்லையில் திமுக பிரமுகர் தாயின் கண்முன்னே சரமாரியாக வெட்டிக்கொலை.. விசாரணை தீவிரம்

பாளை போலிசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில்  நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலின் உட்கட்சி பூசலில் ஏற்பட்ட மோதலால் இந்த  கொலை சம்பவம் நிகழ்ந்ததா  அல்லது பாளையங்கோட்டை பகுதியில் டாஸ்மாக் கடையை குத்தகைக்  எடுத்த பொன்னுதாஸ் அதனை  வரும் 1 ஆம் தேதி திறக்க உள்ளார். இதனால் அவருக்கும் வேறு ஒரு முக்கிய பிரமுகருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தொழில் ரீதியாக ஏற்பட்ட பகையில் இந்த கொலை சம்பவம் நடந்ததா என்ற கோணங்களில்  காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நெல்லையில் திமுக பிரமுகர் தாயின் கண்முன்னே சரமாரியாக வெட்டிக்கொலை.. விசாரணை தீவிரம்

இந்த நிலையில் கொலை நடந்த இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், கொலை செய்யப்பட்ட பொன்னுதாஸ் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கொலையில் நியாயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மூலம் எடுப்பதாக உறுதியளித்தார்.இந்நிலையில் காவல் துறையினர் சம்பவ நடந்த இடம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவிக்களை கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

நெல்லையில் திமுக பிரமுகர் தாயின் கண்முன்னே சரமாரியாக வெட்டிக்கொலை.. விசாரணை தீவிரம்

அரசியலில் இருந்து பல்வேறு உதவிகளை எனது மகன் மக்களுக்கு செய்து வந்தான், இந்த தேர்தலில் நாம் தான் வெற்றி பெறுவோம் எனவும் கூறி வந்தான்,  தனது 27 வயதில் தன் கணவரை இழந்து வாழ்ந்து வரும் நிலையில் வேண்டாம் என்று கூறினேன், ஆனால் என் கண் முன்னே என் மகனை வெட்டி சாய்த்து விட்டனரே என கண்ணீர் மல்க பேச்சியம்மாள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது, காரில் வந்த கும்பல் திமுக பிரமுகரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

தலைப்பு செய்திகள்

மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget