மேலும் அறிய

ஒருதலைக்காதல் என்ற பெயரில் கொடூரம்.. 16 வயது சிறுமியை கோடரியால் வெட்டிக்கொன்ற 21 வயது இளைஞர் கைது!

மகள் பின்னால் சுற்றும், பர்வினை மாணவியின் தந்தை அடித்து மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பர்வீன் மாணவியை பழிவாங்க யோசித்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கவலை அளிப்பதாகவே உள்ளன. வயது வித்தியாசமின்றி பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். குறிப்பாக ஒருதலைக்காதல் விவகாரத்தால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் டெல்லியில் ஒருதலைக்காதல் என்னும் பெயரில் நடந்த வன்தொடர்தல் கொலையில் சென்று முடிந்துள்ளது. 

டெல்லியின் மோட்டி பாஹ் ஏரியாவைச் சேர்ந்த பர்வீன் (21) என்ற இளைஞர் வேலை ஏதும் இல்லாத நிலையில் வீட்டில் இருந்துள்ளார். அவர் அதேபகுதியில் உள்ள 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்ததாக தெரிகிறது. பல மாதங்களாக சிறுமியின் பின்னால் சுற்றித்திரிந்துள்ளார் பர்வீன். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில் வாட்ச்மேனாக வேலை பார்க்கும் தன் தந்தையிடம் சென்று புகாரளித்துள்ளார் அந்த மாணவி. இதனையடுத்து மகள் பின்னால் சுற்றும், பர்வீனை மாணவியின் தந்தை அடித்து மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பர்வீன் மாணவியை பழிவாங்க யோசித்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.


ஒருதலைக்காதல் என்ற பெயரில் கொடூரம்.. 16 வயது சிறுமியை கோடரியால் வெட்டிக்கொன்ற 21 வயது இளைஞர் கைது!

இதனால் ஆர்கே புரம் பகுதிக்குச் சென்ற பர்வீன் ஒரு கோடாரியை விலைக்கு வாங்கியுள்ளார். ஒரு மாதத்துக்கு முன்பே கோடாரியை வாங்கிய பர்வீன், கடந்த திங்கள்கிழமை மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கோடரியால் பெண்ணின் முகத்தில் வெட்டியுள்ளார். இதனால் நிலைதடுமாறி அலறல் சத்தத்துடன் பெண் சரிந்துவிழ, அந்த இடத்தில்  இருந்து தப்பி ஓடியுள்ளார் பர்வீன். ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

இந்த விவகாரம் குறித்து பேசிய டெல்லி சவுத் வெஸ்ட் காவல் ஆணையர் பிரதாப் சிங், எங்களுக்கு சரியாக மதியம் 1.30 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இளம்பெண் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தார்.  ஒருதலைக்காதல் என்னும் பெயரில் பழிவாங்கும் படலமாக இந்த கொலை நடந்துள்ளது என்றார்.


ஒருதலைக்காதல் என்ற பெயரில் கொடூரம்.. 16 வயது சிறுமியை கோடரியால் வெட்டிக்கொன்ற 21 வயது இளைஞர் கைது!

இந்த விவகாரத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹரியானாவில் பதுங்கி இருந்த பர்வீனை கைது செய்தனர். 

உயிரிழந்த இளம்பெண்ணுக்கு சகோதரி ஒருவரும் உள்ளார். இந்த சம்பவம் குறித்து பேசிய அவர், என் அப்பா எலெக்ட்ரிக் கடை வைத்துள்ளார். பழக்கடையும் உள்ளது. தகவல் கேட்டதும் நாங்கள் கடையில் இருந்து வீட்டிற்கு சென்று பார்த்தோம். இறந்த என் சகோதரியும் கடையில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தினமும் இருப்பார். பர்வீன் என் சகோதரியின் பின்னால் சுற்றியதும் இல்லாமல், அவளுடைய பிறந்தநாளுக்குள் அவளை கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்தார் என்றார்.

கருப்பு மாப்பிள்ளையை ‛ரிஜக்ட்’ செய்த தங்கை; கோடரியால் வெட்டிக் கொன்ற அண்னன்!

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
5 சிலைகள்... 800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
5 சிலைகள்...800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்
மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்

வீடியோ

Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Embed widget