Crime : தொடரும் கொடூரம்.. நடுரோட்டில் தெரு நாய்க்கு பாலியல் வன்கொடுமை.. வீடியோவால் அதிர்ந்த காவல்துறை!
டெல்லியில் தெரு நாய் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime : டெல்லியில் தெரு நாய் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில காலங்களாகவே வாயில்லா மிருகங்களை பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. நாய், கன்றுக்குட்டி, மாடு என்று எதையும் விட்டு வைக்காமல் இதுபோன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது டெல்லியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி இந்திரபுரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கடந்த 28-ஆம் தேதி திருமணம் நிகழ்ச்சி சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டு அருகே ஒரு நாய் வலியால் கத்திக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. அதன் சத்தம் கேட்டு அந்த நபர் அங்கே சென்று பார்த்துள்ளார். அந்த நபரின் பக்கத்து வீட்டுக் காரர் சதீஷ் என்பவர் அந்த நாயை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் இது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், சதீஷ் தெரு நாயை பாலியல் வன்கொடுமை செய்ததை ராஜேஷ் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். சதீஷ் மீது புகார் கொடுத்தபோது அந்த வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மதுபோதையில் தெரு நாயை பாலியல் வன்கொடுமை செய்த சதீஷை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் மலைக்காவா என்ற கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறத்தில் கன்று குட்டி ஒன்று கட்டப்பட்டு இருந்தது. கடந்த சனிக்கிழமை இரவு அன்று ஒரு வாலிபர் அந்த கன்று குட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டு அங்கு வந்த உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உரிமையாளரை பார்த்தம் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி சென்றார். அதன் பின், இது பற்றி காவல்நிலையத்தில் கன்றுக்குட்டியின் உரிமையாளர் புகார் அளித்தார். இதனை அடுத்து போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். அண்மையில் இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. டெல்லி பூங்காவில் இளைஞர் 2 பேர் சேர்ந்து, இரண்டு தெரு நாய்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் கண்டனங்களை பெற்றது.
மேலும் படிக்க