Crime: ஆரணி அருகே இளம் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய ராணுவ வீரர் - பல பெண்களுடன் தொடர்பு
தன்னை திருமணம் செய்ய கோரி ராணுவ வீரரிடம் கெஞ்சி கதறிய இளம்பெண். ஆடியோவில் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் அஞ்சலி தம்பதியினரின் இளைய மகன் மதன்குமார் வயது (25) என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து தற்போது ஜதரபாத்தில் பணி செய்து வருகின்றார். மேலும் ஆரணி அருகே ஏந்தும்வாம்பாடி கிராமத்தை சேர்ந்த செங்குட்டுவன் மகள் ஷகிலா வயது (23). பட்டதாரி பெண்ணான இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். மேலும் மதன்குமாரின் அத்தை மகளான ஷகிலாவை கடந்த 5 ஆண்டுகளாக ராணுவ வீரர் மதன்குமார் காதலித்து வந்துள்ளார். விடுமுறையில் வரும் போது ஷகிலாவுடன் தனிமையில் சந்தித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராணுவ வீரர் மதன்குமார் விடுமுறையில் வந்து ஷகிலாவை தனிமையில் சந்தித்துள்ளார். இதில் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனிமையில் உல்லாசமாக இருந்ததுள்ளனர்.
பின்னர் ராணுவ வீரர் விடுமுறை முடித்து விட்டு மீண்டும் தனது பணிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தனிமையில் உல்லாசமாக இருந்த காரணத்தினால் ஷகிலா கர்ப்பமாகி 6 மாத காலம் வரையில் வீட்டில் யாருக்கும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஷகிலா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனை சிகிச்சையில் தெரிய வந்தன. இதனால் ஷகிலாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது சம்மந்தமாக ஷகிலா மற்றும் குடும்பத்தினர் ராணுவ வீரர் மதன்குமாரின் குடும்பத்தினரை அணுகி நியாயம் கேட்க போது ராணுவ வீரர் குடும்பத்தினர் தங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமில்லை என தெரிவித்துள்ளதாக தெரிகின்றன. கருவுற்ற ஷகிலா முழு கர்ப்பிணியாகி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அழகான ஆண் குழந்தை பெற்று எடுத்தார்.
ஆனால் இந்த சந்தோஷம் சுமார் சில மணி நேரம் நீடித்தது. குழந்தை பிரசவத்தில் எடை குறைவாக இருந்த காரணத்தினால் பிறந்த ஆண் குழந்தை சில மணி நேரத்திலேயே இறந்து விட்டது. தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ராணுவ வீரர் மதன்குமார் மற்றும் அவரது தந்தை ரமேஷ் ஆகியோர் மீது ஷகிலா ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் அல்லிராணி ராணுவ வீரர் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு 5 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து ராணுவ வீரர் மதன்குமாரை கைது செய்ய ஜதரபாத்தில் பணிபுரியும் இடத்திற்கு சம்மன் அனுப்பபட்டுள்ளன. மேலும் தலைமறைவான ராணுவ வீரர் மதன்குமாரின் தந்தை ரமேஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், இளம்பெண் ராணுவ வீரர் மதன்குமார் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னுடன் உல்லாசமாக இருந்துள்ளதால் தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளேன். என்னை திருமணம் செய்து கொள் எனவும் காதலனிடம் கதறி அழுதுள்ளார். ஆனால் காதலனோ நான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கின்றேன். அவளை திருமணம் செய்து கொள்ள போகின்றேன் எனவும் கான்பிரன்ஸ் காலில் மற்றொரு பெண்ணுடன் ஷகிலா உரையாடியபோது அவர் கெஞ்சி கதறி அழுதுள்ளார்.
மேலும் அந்த ஆடியோவில் ராணுவ வீரர் மதன்குமார் உன்னை தவிர மற்ற 5 இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளதாகவும் உன்னை திருமணம் செய்ய முடியாது எனவும் திட்டவட்டமாக ஷகிலாவிடம் மறுப்பு தெரிவித்து குழந்தை பிறந்த பின்பு வேறு ஒர்ருவரிடம் பணத்தை கொடுத்து குழந்தையை வளர்த்து கொள்ளவும் எனவும் பேசியுள்ளார். ஆரணி அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்தும் 5 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளதாக ராணுவ வீரர் கூறிய ஆடியோ வெளியாகியதால் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.