Crime: அதிர்ந்த கேரளா! 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...உடலை குப்பை கிடங்கில் வீசிய கொடூரன்...
கேரளாவில் 5 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தை உலுக்கியுள்ளது.
Crime: கேரளாவில் 5 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தை உலுக்கியுள்ளது.
காணாமல் போன சிறுமி:
கேரளா மாநிலம் ஏர்ணாகுளம் மாவட்டம் உள்ள அலுவாக அருகே உள்ள தைக்காட்டுக்காரா என்ற பகுதியில் ஒரு தம்பதி சுமார் 4 ஆண்களாக வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளது. இவர்களது 5 வயது மகள் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இருந்து மாயமாகியுள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் ஆலவா பகுதி முழுவதும் தேடியுள்ளனர். ஒரு கட்டத்தில், தனது மகள் கிடைக்காமல் போனதால் உள்ளூர் காவல்நிலையத்தில் இரவு 7.10 மணிக்கு புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், 5 வயது சிறுமியை ஒருவர் கடத்தி சென்று திரிசூர் நோக்கி சென்ற பேருந்தில் ஏற்றிச் சென்றதும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிந்தது.
மேலும், சிறுமியை கடத்தியது பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான அஸ்பாக் ஆலம் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. விசாரணை தீவிரப்படுத்திய போலீசார் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு அஸ்பாக் ஆலம் கைது செய்தனர். ஆனால், அன்றைய நாள் அஸ்பாக் ஆலம் மதுபோதையில் இருந்ததால் போலீசாரால் விசாரிக்க முடியவில்லை. மதுபோதை தெளிந்ததை அடுத்து, போலீசார் நேற்று காலை விசாரணை நடத்தினர். அப்போது அவர், சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:
அஸ்பாக் ஆலமிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து பின்னர், உடலை குப்பைக்கிடங்களில் வீசியுள்ளதாக வாக்குமூலம் அளித்தார். பின்னர், இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆலவா பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு பின்புறம் குப்பை கிடங்கில் இருந்து சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். சுமார் 20 மணி நேர தேடுதலுக்கு பிறகு 5 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. மேலும், சிறுமியை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். சிறுமியின் உடல் மற்றும் பிறப்புறுப்பில் அதிக காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.
மேலும், அஸ்பாக் ஆலம் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் சிறுமியின் பெற்றோர் வசிக்கு பகுதியில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக வந்து குடியேறியுள்ளார். ஜூஸ் வாங்கித் தருவதாக கூறி, சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் கொடுமை செய்து கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி குப்பை கிடங்கில் வீசியுள்ளது விசாரணையில் தெரிந்தது. இந்த சம்பவம் கேரளா மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.