மேலும் அறிய

Crime: தஞ்சை அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை கடத்திய 5 பேர் கைது

வினோத்துடன் கடத்தப்பட்ட பெண்ணின் கணவர் பங்குதாரராக இணைந்து செயல்பட்டு, கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே முன் விரோதம் காரணமாக பெண்ணைக் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலரால் காரில் கடத்திச் செல்லப்பட்டார். தகவலறிந்த தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாம்சன் லியோ, குற்றப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சுவாமிநாதன், சைபர் குற்றப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் குபேந்திரன் உள்ளிட்டோர் அந்த காரை விரட்டிச் சென்று செங்கிப்பட்டி அருகே புதுக்குடி சோதனை சாவடி பகுதியில் மடக்கிப் பிடித்தனர். இதில் அப்பெண்ணை திருச்சி எல்.ஐ.சி. காலனி முருகவேல் நகரைச் சேர்ந்த ஆர். வினோத் என்கிற வேதகிரி (39), அவரது சகோதரி பிரீத்தி (41), ஜீயபுரம் கடியாகுறிச்சியைச் சேர்ந்த பி. மாரியப்பன் (44), திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த கே. ராஜப்பன் (32), பாளையங்கோட்டையைச் சேர்ந்த பி. கோபாலகிருஷ்ணன் (32) ஆகியோர் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் வினோத் நிதி நிறுவனம் நடத்தி, விருதுநகர், தென்காசி, ஈரோடு, ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் மோசடி செய்ததாகப் பொருளாதார குற்றப் பிரிவினர் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

வினோத்துடன் கடத்தப்பட்ட பெண்ணின் கணவர் பங்குதாரராக இணைந்து செயல்பட்டு, கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இந்நிலையில், தென்காசியில் நடந்த மோசடி தொடர்பாக வினோத் தரப்பைச் சேர்ந்த மாரியப்பனை சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட நபர்கள் கடத்திச் சென்றனர். இதற்கு கடத்தப்பட்ட பெண்ணின் கணவர்தான் காரணம் என வினோத் தரப்பினர் கருதினர்.

இதற்கு பழிவாங்கும் விதமாக அப்பெண்ணை 5 பேரும் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, வினோத், பிரீத்தி, மாரியப்பன், ராஜப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரை தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருகே வல்லம் பிரிவு சாலை பகுதியில் அரசு பஸ் டயரில் சிக்கி நீடாமங்கலத்தை சேர்ந்த இன்ஜினியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமான இறந்தார்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே காட்டா கல்படுகையைச் சேர்ந்தவர் அருள்தாஸ் என்பவரின் மகன் சகாய சரண்ராஜ் (33). இன்ஜினியர். இவர் தனது மைத்துனர் சுதாகருடன் திருச்சியிலிருந்து பைக்கில் நேற்று  மாலை ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.

தஞ்சாவூர் அருகே வல்லம் பிரிவு சாலை பகுதியில் வந்தபோது இருவரும் முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திச் செல்ல முயன்றபோது கீழே விழுந்தனர். அப்போது, சகாய சரண்ராஜ் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் போலீசார் சகாய சரண்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுதாகர் படுகாயங்களுடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்தில் இறந்த சகாய சரண்ராஜூக்கு திருமணமாகி இரு மாதங்களே ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
Embed widget