மேலும் அறிய

காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்: 25 நாட்களில் இருவரையும் கொலை செய்த பெண்ணின் தந்தை!

எட்டையபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தில் காதல் தம்பதியினர் கொலை செய்யப்பட்ட விவகாரம்-ரேஷ்மாவின் தந்தை முத்துக் குட்டியை காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவரது தாயார் மகாலட்சுமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த 25 நாட்களில் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்: 25 நாட்களில் இருவரையும் கொலை செய்த பெண்ணின் தந்தை!

எட்டயபுரம் அருகே கடலையூரை அடுத்துள்ள வீரப்பட்டி சேவியர் காலனியைச் சேர்ந்த வடிவேல் மகன் மாணிக்கராஜா(25). லாரி ஓட்டுநரான இவர் அதே பகுதியை சேர்ந்த முத்துகுட்டி மகள் ரேஷ்மா(20) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காத நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி மாணிக்கராஜா, ரேஷ்மாவுடன் மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீஸார் விசாரணை நடத்தி, அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் திருமணம் செய்து வைத்து பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தினர்.

காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்: 25 நாட்களில் இருவரையும் கொலை செய்த பெண்ணின் தந்தை!

இதற்கிடையே, ரேஷ்மாவும் மாணிக்கராஜன் காதல் செய்தது கண்டித்த முத்துக்குட்டி தனது மகளுக்கு விரைவாக திருமணம் செய்ய ஏதுவாக கடந்த ஜூன் 26 ஆம் தேதி முப்புனித நீராட்டு விழா நடத்தியுள்ளார். அதற்கு மறுநாள் மாணிக்க ராஜும் ரேஷ்மாவும் ஊரைவிட்டு தலைமறைவாகினர். எட்டயபுரம் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லையென ரேஷ்மாவின் தந்தை முத்துகுட்டி புகார் அளித்திருந்தார். ரேஷ்மா காதலுனுடன் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது தெரியவந்தவுடன், எட்டயபுரம் போலீஸார் அவர்களை வீரப்பட்டி வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்: 25 நாட்களில் இருவரையும் கொலை செய்த பெண்ணின் தந்தை!

இந்நிலையில், கடந்த வாரம் மாணிக்கராஜா தனது காதல் மனைவி ரேஷ்மாவுடன் சொந்த ஊரான வீரப்பட்டிக்கு வந்தார். நேற்று காலை சுமார் 12 மணியளவில் தம்பதி வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது அங்கு மர்மநபர்கள் மாணிக்கராஜா, ரேஷ்மா ஆகியோரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

தகவல் அறிந்து விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ், கோவில்பட்டி டி.எஸ்.பி. (பொறுப்பு) சிவசுப்பு, எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கணவன் மனைவி சடலங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரேஷ்மாவின் தந்தை முத்துகுட்டி இருவரையும் கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து எட்டயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காதல் திருமணம் செய்து 25 நாட்களே ஆன நிலையில் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்: 25 நாட்களில் இருவரையும் கொலை செய்த பெண்ணின் தந்தை!

எட்டையபுரம் அருகே காதல் தம்பதியினர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ரேஷ்மாவின் தந்தை முத்துக் குட்டியை காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவரது தாயார் மகாலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget