மேலும் அறிய

கோவையில் தன்பாலின சேர்க்கைக்கு அழைத்து பணம் பறிப்பு - கல்லூரி மாணவர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

பிரசாத் உடன் கங்காதரன் நிர்வாணமாக ஒரின சேர்க்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது, அப்பகுதிக்கு வந்த நிஷாந்த், மாணிக்கம் ஆகியோர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

கோவை கணபதி பகுதியில் உள்ள தாரணி நகர் 8 ஆவது வீதியை சேர்ந்தவர் கங்காதரன் (34).  இவர், காந்திபுரம் காளிங்கராயன் வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் தற்பாலின சேர்க்கையில் நாட்டம் கொண்டவர் எனவும், தற்பாலின சேர்க்கையாளர்கள் உள்ள மொபைல் ஆப் குழுவிலும் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவானந்தா காலனி காந்தி நகரைச் சேர்ந்த பிரசாத் (19) என்பவர், கங்காதரனை செல்போனில் தொடர்பு கொண்டு தற்பாலின சேர்க்கைக்காக வடகோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வரச் சொல்லி உள்ளார். இதன்படி கடந்த 27 ஆம் அன்று கங்காதரனும் அப்பகுதிக்கு சென்றுள்ளார். 

அங்கு பிரசாத் உடன் கங்காதரன் நிர்வாணமாக தற்பாலின சேர்க்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது, அப்பகுதிக்கு வந்த  நிஷாந்த், மாணிக்கம் ஆகியோர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் பிரசாத், நிஷாந்த், மாணிக்கம் ஆகிய மூவரும் இணைந்து கங்காதரனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அப்போது கங்காதரன் பணம் இல்லை எனக் கூறியதால், அவரிடம் இருந்த அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு மூவரும் தப்பி சென்று விட்டனர். பிரசாத் திட்டமிட்டு தன்னை வரவழைத்து வீடியோ எடுத்து மிரட்டி செல்போனை பறித்துச் சென்றது கங்காதரனுக்கு தெரிந்தது. 

இந்த சம்பவம் குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் கங்காதரன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பிரசாத்தினை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட பிரசாத்தினை நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். நிஷாந்த் மற்றும் மாணிக்கம் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இளைஞரை தற்பாலின சேர்க்கைக்கு அழைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி செல்போனை பறித்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget