Crime: பறிபோன பற்கள்.. உயிரை மாய்த்த ஐடிஐ மாணவன்! நடந்தது என்ன?
Crime: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விக்னேஷ் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் முகத்தில் பலத்த காயம் அடைந்த அவர் தன்னுடைய 17 பற்களை இழந்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் பற்களை இழந்த 18 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஐடிடி மாணவர்:
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் புவனகட்டே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் இவரது மகள் விக்னேஷ் (வயது 18) இவர் அந்தப்பகு =தியில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் (ஐ.டி.ஐ) படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விக்னேஷ் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் முகத்தில் பலத்த காயம் அடைந்த அவர் தன்னுடைய 17 பற்களை இழந்துள்ளார். செயற்கை பற்களை பொருத்துவதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால், செயற்கை பற்களை பொருத்தமுடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர் விக்னேஷ் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.
வீபரித முடிவு:
மேலும், பற்கள் இல்லாததால் விக்னேஷை அக்கம்பக்கத்தினரும். தன்னுடன் படிக்கும் சக மாணவர்களும் கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் விக்னேஷ் மிகவும் விரக்தி அடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த நிலையில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய விக்னேஷின் பெற்றோர் வீட்டில் பிணமாக விக்னேஷ் தொங்குவதை பார்த்து கதறி அழுதனர்.
போலீஸ் விசாரணை:
இது பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் வந்து நடத்திய விசாரணையில், விபத்தில் பற்களை இழந்ததால் விரக்தியில் இருந்த விக்னேஷ்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

