மேலும் அறிய

101 பவுன் தங்க நகை போதாதாம்.. சொந்த வீடு வேணுமாம்.. ஐஐடி பேராசிரியர் என ஏமாற்றி திருமண செய்த நபர்!

சென்னை ஐஐடியில் பேராசிரியர் என்று பொய் சொல்லி டாக்டர் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை தியாகராயநகர் கங்கைகரைபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் 29 வயதான சண்முக மயூரி. டாக்டரான இவர் சென்னை மாநகராட்சி அசோக்நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை அசோக்நகர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் பரபரப்பு புகார் மனு அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

எனது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சேத்திடல் கிராமம் ஆகும். எனது பெற்றோர் மும்பையில் தங்கி தொழில் செய்து வருகின்றனர். எனக்கும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள சக்கந்தி என்ற கிராமத்தை சேர்ந்த 34 வயதான பிரபாகரனுக்கும் கடந்த 7.2.2020 அன்று திருமணம் நடைபெற்றது.

பிரபாகரன் சென்னை ஐ.ஐ.டி. பல்கலைகழகத்தில் பி.எச்.டி.பட்டம் பெற்று, அங்கேயே பேராசிரியராக பணிபுரிந்து வருவதாக கூறினார். எனவே அவருக்கு வரதட்சணையாக 101 பவுன் தங்கநகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம், 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.15 லட்சம் மதிப்பிலான கார் உள்ளிட்ட பொருட்களை எனது பெற்றோர் வழங்கினார்கள். அவர்கள் குடும்பத்தினர் சென்னையில் சொந்த வீடுவாங்கி தரவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு எனது பெற்றோர் சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால் திருமணத்துக்கு அதிகம் செலவானதால் அது முடியாமல் போனது.

இந்த சூழ்நிலை யில் நானும், பிரபாகரனும் சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள பெரியார் வீதி திருநகரில் உள்ள வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு வாடகைக்கு குடியேறினோம். தினமும் பிரபாகரன் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். வீடு வேண்டும் என்று என்னை அடித்து சித்ரவதை செய்வார். இதையெல்லாம் அனுசரித்து வாழ்ந்தேன். 

கடந்த பிப்ரவரி மாதம் எனது நண்பரின் திருமண விழாவுக்கு செல்வதற்கு நகைகளை தேடியபோது, பிரபாகரன் அந்த நகைகளை தனது சகோதரருக்கு அடகுவைத்து கொடுத்திருப்பதாக சொன்னார். இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் வந்தது. நான் எனது தம்பியுடன் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி அன்று சென்னை ஐ.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் விசாரித்த போது, அவர் அங்கு வேலை செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

இதுகுறித்து அன்றைய தினம் அவரிடம் கேட்ட போது, சொந்த வீடுக்காக தான் உன்னை திருமணம் செய்தேன் என்று கூறி என்னை கடுமையாக தாக்கி, அரிவாளால் வெட்டினார். நான் கதறி அழுதவுடன் பக்கத்து அறையில் இருந்த எனது தம்பி ஓடிவந்தார். உடனே பிரபாகரன் அரிவாளை போட்டுவிட்டு ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து மும்பையில் வசிக்கும் எனது பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் பொறுத்துக்கொள் என்று சொல்லி என்னை சமாதானம் செய்ததால், அப்போது போலீசில் நான் புகார் அளிக்கவில்லை.

இந்த நிலையில் நானும், எனது தம்பியும் பிரபாகரனின் 'லேப்-டாப்'பை திறந்து, அவரது இணையதள முகவரியை பார்த்தோம். அதில் இருந்த தகவல் மூலம் அவருக்கு 2019-ம் ஆண்டு வேறொரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை இருப்பதை கண்டுபிடித்தோம். இது பற்றி கேட்ட போது, எனது தம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

என்னையும், என் பெற்றோரையும் ஏமாற்றி மோசடி செய்த பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கைஎடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த புகாரின்பேரில் பிரபாகரன், அவரது தந்தை விஸ்வநாதன் (70), மனைவி மஞ்சனை (65), சகோதரர் கண்ணதாசன் (38), அவருடைய மனைவி வனிதா (32), மற்றொரு சகோதரர் நெப்போலியன் (31) ஆகிய 6 பேர் மீது அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ரேணுகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையின் அடிப்படையில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget